சனிக்கிழமையில் ஒரே 1 எலுமிச்சை பழத்தை இப்படி செய்யுங்கள், உங்களை பிடித்த பீடை எல்லாம் ஒழியும்!

பொதுவாக இந்த பிரபஞ்சத்தின் சக்தி பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் அதிகரித்து காணப்படுவதாக சொல்லப்படுகிறது. அதனால் தான் அந்த நாட்களில் பூஜைகள், புனஸ்காரங்கள், விசேஷங்கள், பரிகாரங்கள் கூட வெகுவாக செய்யப்படுகின்றது. மேலும் எதிர்மறை விஷயங்களாக இருக்கக் கூடிய பில்லி, சூனியம், ஏவல் போன்றவை கூட அந்த நாளில் செய்வதை நாம் பார்த்திருப்போம். அதை விட சக்தி வாய்ந்த நாளாக இருக்கக் கூடியது சனிக்கிழமை!

perumal2

இந்த சனிக் கிழமையில் எலுமிச்சை பழத்தை வைத்து இதை செய்யும் பொழுது நம்மை பிடித்த திருஷ்டிகள், பீடைகள், தரித்திரங்கள் அனைத்தும் ஒழியும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் சனிக் கிழமையில் நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ளப் போகிறோம். பொதுவாக சனிக்கிழமை ஹரிநாராயணருக்கு உகந்ததாக சொல்லப்படுவது உண்டு. சனிக்கிழமையில் பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு தரும் தீர்த்தத்தை பருகி வந்தால் உடலில் நோய் நொடிகள் எல்லாம் தீரும் என்பது நம்பிக்கை.

தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமையிலும் துளசி மாலை சாற்றி வழிபட்டு வருபவர்களுக்கு தடைகள் விலகும் என்பது ஐதீகம். அது போல வீட்டில் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சை பழத்தில் கரும்புள்ளிகள் மேலே இல்லாதவாறு சுத்தமாக பார்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அது தோஷம் அற்றதாக இருக்கும். இந்த எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். இதை பூஜை அறையில் ஒரு பித்தளை தாம்பூலத்தில் வைத்து நறுக்குங்கள். பின்னர் வெட்டிய பழங்களை வீட்டில் நான்கு மூலைகளிலும் பிழிந்து அதன் சாற்றை தெளியுங்கள்.

lemon

பிறகு கையில் இருக்கும் எலுமிச்சை பழத்தை வெளியில் தூக்கி எறிந்து விடுங்கள். வலது கையில் இருப்பதை இடது புறத்திலும் இடது கையில் இருப்பதை வலது புறத்திலும் மாறி மாறி தூக்கி எறிய வேண்டும். திருஷ்டி கழிப்பது போலவே இதை செய்வதாலும் நம் குடும்பத்தில் இருக்கக் கூடிய தரித்திரங்கள், பீடைகள் ஒழிவதாக சாஸ்திர நம்பிக்கை உண்டு. பின்னர் கையை அலம்பி கொண்டு திரும்பி பார்க்காமல் உள்ளே வந்து விடுங்கள்.

இது போல ஒவ்வொரு சனிக்கிழமைகளும் நீங்கள் எலுமிச்சை பழத்தை பூஜை அறையில் வைத்து வெட்டி எடுத்துக் கொண்டு வந்து நான்கு மூலைகளிலும் தெளித்து வெளியில் போட்டு வர வேண்டும். கண்ணுக்கு தெரியாத திருஷ்டிகள், வாஸ்து தோஷங்கள், தீய சக்திகள், துர் தேவதைகள் விரட்டப்படுவதாக இதன் மூலம் சொல்லப்படுகிறது. தீராத வியாதிகளால் அவதிப்படுபவர்களும் இதுபோல வீட்டில் செய்து பார்க்கலாம். மந்திர, மாந்திரீக, தாந்த்ரீகங்கள் கூட இந்த எலுமிச்சை பழத்தின் முன்பு தோற்றுவிடும். அந்த அளவிற்கு எலுமிச்சை பழம் தேவ கனியாக இருப்பதால் மகத்துவம் வாய்ந்ததாக நம்பப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:
உங்கள் வீட்டில் துளசி மாடம் உள்ளாதா? அப்படியானால் மிகப்பெரிய அதிர்ஷ்டம் உங்களுக்காக காத்திருக்கிறது. துளசி செடியுடன் இதையும் சேர்த்து வைத்தால் எங்கிருக்கும் அதிர்ஷ்டமும் உங்கள் வீடு தேடி வந்து விடும்.

எலுமிச்சை பழத்தை எப்பொழுதும் பூஜை அறையில் இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சை பழம் வீட்டில் தீர்ந்து போகக்கூடாது. குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிறு, செவ்வாய் கிழமைகளில் எலுமிச்சை பழம் வீட்டில் இருப்பது ரொம்ப விசேஷமானது. இதை வைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் வீடு, கடை, அலுவலகம், குழந்தைகள், குடும்பத்திற்கு என்று திருஷ்டி சுற்றி கழுத்து முச்சந்தியில் சென்று போட்டு வந்தால் பல தடைகளை தாண்டி வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்.

The post சனிக்கிழமையில் ஒரே 1 எலுமிச்சை பழத்தை இப்படி செய்யுங்கள், உங்களை பிடித்த பீடை எல்லாம் ஒழியும்! appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.