காரசாரமான காரச் சட்னி செய்வதற்கு வெங்காயம் கூட தேவையில்லை! இப்படி ஒரு சட்னி செய்து கொடுத்தால் 10 இட்லி கூட பத்தாம போயிடுமே!

இட்லி, தோசைக்கு தொட்டுக்க எப்போதுமே சூப்பரான காம்பினேஷன் இந்த காரச் சட்னி ஆகும். ஹோட்டலில் கார சட்னி வைத்து கொடுத்தாலே நம் வாயில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். இட்லி, தோசைக்கு வீட்டிலேயே எப்படி சுவையான காரசாரமான கார சட்னியை வெங்காயம் இல்லாமலேயே செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

tomato

காரசாரமான கார சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
தக்காளி – 4, வரமிளகாய் – 12, புளி – நெல்லிக்காய் அளவு, இஞ்சி – ஒரு இன்ச், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுந்து – கால் ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

காரசாரமான கார சட்னி செய்முறை விளக்கம்:
இந்த கார சட்னி செய்வதற்கு முதலில் பழுத்த பெரிய நான்கு தக்காளி பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை நன்கு கழுவி சுத்தம் செய்து நான்கைந்தாக நறுக்கி ஒரு மிக்ஸர் ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை பச்சையாக தான் அரைக்கப் போகிறோம். நான்கு தக்காளி பழங்களுக்கு 12 வர மிளகாய்களை காம்பு நீக்கி சேர்க்க வேண்டும். இவ்வளவு மிளகாய் சேர்த்தாலும் இந்த சட்னி அவ்வளவு காரம் தெரியாது கவலைப்பட வேண்டாம்.

tomato-chutney-recipe

பின்னர் மிக்சர் ஜாரில் ஒரு நெல்லிக்காய் அளவிற்கு புளியை விதை, நாரெல்லாம் நீக்கி சேருங்கள். ஒரு சிறு துண்டு அளவிற்கு இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி சேருங்கள். பின் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள். இதில் அதிகமாக தண்ணீர் எதுவும் சேர்க்கக்கூடாது, கெட்டியாக சட்னி இருந்தால் தான் ருசியாக இருக்கும். அதனால் உங்கள் தேவையான அளவிற்கு ஏற்ப கூட குறைய பொருட்களை சேர்த்துக் கொள்வது நல்லது.

பின்னர் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலையை அப்படியே கழுவி உருவி சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். தாளிப்பு அடங்கியதும் நீங்கள் அரைத்து வைத்துள்ள இந்த சட்னியை சேர்த்து ஒரு முறை நன்கு கலந்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
இட்லி தோசை சப்பாத்தி பூரிக்கு தொட்டு சாப்பிட சூப்பரான ஒரு பாம்பே சட்னி செய்வது எப்படி? சமையலே தெரியாதவர்கள் கூட, ஐந்தே நிமிடத்தில் இதை மணக்க மணக்க சூப்பராக செய்து முடிக்கலாம்.

சட்னி லேசாக கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கிண்டி விடுங்கள். ஒரு ரெண்டு நிமிடம் நன்கு கிண்டி பச்சை வாசம் போனதும் அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதாங்க, இந்த சூப்பரான கெட்டியான காரசாரமான காரச் சட்னி செய்வதற்கு வெங்காயம் கூட தேவையில்லை இட்லி, தோசைக்கு தொட்டுக்க இதை விட சூப்பரான காம்பினேஷன் இருக்கவே முடியாது. நீங்களும் இதே மாதிரி சுலபமாக காரசாரமான காரச் சட்னி செய்து உங்க வீட்டில் இருக்கும் எல்லோரையும் அசத்துங்க!

The post காரசாரமான காரச் சட்னி செய்வதற்கு வெங்காயம் கூட தேவையில்லை! இப்படி ஒரு சட்னி செய்து கொடுத்தால் 10 இட்லி கூட பத்தாம போயிடுமே! appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.