சீன வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த மஸ்க் | கீவ் நகரில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் | உலகச் செய்திகள்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், மூன்று வருடங்களுக்குப் பிறகு சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கின் கேங்கை (Qin Gang) சந்தித்தார். அமெரிக்கா, சீனா இடையேயான உறவுகள் குறித்துப் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

`தன்பாலின உறவில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்’ என்ற சட்டம் உகாண்டா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இது மாதிரியான சட்டங்கள் மிகவும் வேதனை அளிப்பதாக ஐ.நா-வின் தலைமை அதிகாரி அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்திருக்கிறார்.

உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து மூன்றாவது நாளாக டிரோன் மூலம் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது.

இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தானில் நடத்திய தாக்குதல் தொடர்பான வழக்கில், முன்னாள் பிரதமரான இம்ரான், நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டார். மேலும் அவரின் முன் ஜாமீனிற்காக ஆவணங்களையும் சமர்ப்பித்தார்.

சீனா தனது சொந்த விண்வெளி நிலையத்துக்கு நேற்று மூன்று விண்வெளி வீரர்களை அனுப்பியது. தற்போது அவர்கள் வெற்றிகரமாக சென்றடைந்ததாக கூறப்படுகிறது.

தெரானோஸ் நிறுவனத்தின் நிறுவனர் எலிசபெத் ஹோம்ஸ் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனைக் காலம் இன்றிலிருந்து தொடங்கியிருக்கிறது.

1989-ல் வெளிவந்த Little Mermaid படத்தை ரீமேக் செய்து தற்போது டிஸ்னி நிறுவனம் வெளியிட்டது. இது மக்களைத் தற்போது பெரிதளவில் ஈர்த்திருக்கிறது.

Litty Liquor என்ற மதுபான நிறுவனத்தின் விளம்பரம் அதீத மதுப் பழக்கத்தை ஊக்குவிப்பதாகக் கூறி தற்போது தடை செய்யப்பட்டிருக்கிறது. இதில் 25 வயது புகழ்பெற்ற ராப்பர் ArrDee நடித்திருக்கிறார்.

முன்னாள் விம்பிள்டன் சாம்பியன் வீராங்கனையான கார்பைன் முகுருசா, தன்னுடைய ரசிகரையே நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.