இந்த வெள்ளி மோதிரத்தை அணிந்து இருக்கும் கையில் பணம் இல்லாமல் போவதற்கு வாய்ப்பே இல்லை. பணம் எப்போதும் உங்கள் கையில் தாராளமாக புழங்க வெள்ளி மோதிரத்தை இது போல வாங்கி அணிந்து கொள்ளுங்கள்.

தங்கம் எந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறதோ அதை விட பல மடங்கு உயர்ந்தது வெள்ளி. மகாலட்சுமி தாயாரின் புகுந்த வீட்டு பொருளாக தங்கம் பார்க்கப்படுகிறது. வெள்ளியானது தாய் வீட்டு பொருளாகவே பார்க்கப்படுகிறது. எந்த ஒரு பெண்ணிற்கும் புகுந்த வீட்டை விடவும் தாய் வீடு ஒரு படி மேலாக இருக்கும். அந்த வகையில் தாயாரின் தாய் வீட்டு பொருளான வெள்ளி நகையை நாம் சரியான முறையில் பயன்படுத்தினோம் என்றால் பணவரவிற்கு பஞ்சமே இருக்காது. அந்த வகையில் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவு வெள்ளி மோதிரத்தை அணிவது குறித்த தகவலை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

mahalakshmi1

ஆண் பெண் இருவருக்குமே கைகளில் மோதிரம் அணியும் பழக்கம் நல்லது. ஆனால் எந்த மோதிரத்தை எந்த விரலில் அணிய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அணிவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அதிலும் வெள்ளி மோதிரத்தை அணியும் போது அதன் பலன் பல மடங்கு இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் வெள்ளி மோதிரத்தை எந்த விரலில் அணிய வேண்டும் என்பதையும் எந்த மாதிரியான மோதிரத்தை அணிய வேண்டும் என்பதை குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.

பணப்புழக்கம் அதிகரிக்க அணிய வேண்டிய மோதிரம்
பண வரவிற்கு வெள்ளி மோதிரம் அணிய வேண்டும் என்ற உடன் நாம் எந்த விரலில் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம் என்று நினைக்கக் கூடாது அதை அணிவதற்கும் ஒரு முறை உண்டு. பண வரவிற்காக அணியும் இந்த வெள்ளி மோதிரம் ஆனது 8 எண் வடிவில் இருக்க வேண்டும் அதாவது எட்டை சாய்வாக வைத்தால் எப்படி இருக்குமோ அது போன்று ஒரு வெள்ளி மோதிரத்தை நாம் இடது கையில் நடு விரலில் அணிய வேண்டும்.

ring

எட்டு சாய்வான நிலையில் இருப்பது பிரபஞ்சத்தை குறிப்ப தாகும் அதே போல் நம்முடைய நடுவிரல் ஆனது சனியின் ஆதிக்கம் நிறைந்த விரல் வெள்ளி மோதிரம் என்பது சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த பொருளாகவும் பார்க்கப்படுகிறது ஒருவருடைய ஜாதகத்தில் சனியின் ஆதிக்கம் சுக்கிரன் ஆதிக்கம் இருக்குமே ஆனால் அவர்கள் செல்வ நிலையில் வாழ்ப்பது உறுதி.

அந்த யோகம் வாய்க்க பெறாதவர்கள் இந்த முறையில் மோதிரம் அணிந்து கொண்ட இரண்டு படம் வாழ்ந்த கிரகங்களின் ஆதிக்கத்தை நாம் ஈர்த்து பிரபஞ்ச த்தின் ஆற்றலையும் பெற்று பண வரவை அதிகரித்துக்கொள்ள முடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இனி நீங்கள் வெள்ளி மோதிரம் அணிய வேண்டும் என்றால் இது போல வாங்கி பிறகு பெருவிரலில் அணிந்து கொள்ளுங்கள் இது உங்களுக்கு மிகப்பெரிய யோகத்தை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: அட! இப்படி எல்லாம் கூடவா பரிகாரங்கள் இருக்கிறது. பல பிரபல்யங்கள் பின்பற்றி, கோடீஸ்வர யோகத்தை பெற்ற இந்த பரிகாரங்களை நாமும் செய்து தான் பார்ப்போமே.

பண வரவை ஈர்க்கவும் பணம் தாராளமாக கையில் புழுங்கவும் வெள்ளி மோதிரத்தை எப்படி அணிய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும் நம்புகிறோம். இந்த ஆன்மீக தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நினைத்தால் நீங்களும் இதே போல மோதிரத்தை அணிந்து தாராளமான பண வரையை பெருக்கிக் கொள்ளலாம் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

The post இந்த வெள்ளி மோதிரத்தை அணிந்து இருக்கும் கையில் பணம் இல்லாமல் போவதற்கு வாய்ப்பே இல்லை. பணம் எப்போதும் உங்கள் கையில் தாராளமாக புழங்க வெள்ளி மோதிரத்தை இது போல வாங்கி அணிந்து கொள்ளுங்கள். appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.