ஆஸ்திரேலியாவில் கோயில்கள் மீதான தாக்குதலா.. இனி சான்ஸ் இல்ல.. மோடியால் நிகழ்ந்த மாற்றம்!

ஆஸ்திரேலியாவில் இந்திய கோயிலுக்கு எதிரான தாக்குதல்களுக்கு பிரதமர் மோடி அவர்கள் ஆஸ்திரேலியா பிரதமருடன் கலந்துரையாடி இருக்கிறார் அந்த கலந்துரையாடல் இதோ,  ஆஸ்திரேலியாவில் கோயில்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பிரிவினைவாத சக்திகளின் செயல்பாடுகள் தொடர்பாக, நானும் பிரதமர் அல்பனீஸும் கடந்த காலங்களில் கலந்துரையாடி இருக்கிறோம். இன்றும் இந்த விஷயம் தொடர்பாக கலந்துரையாடினோம். இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே உள்ள நட்புறவு மற்றும் ஒத்துழைப்பிற்கு யாரும் எந்த வகையிலும் தீங்கு விளைவிப்பதை நாம் ஏற்க முடியாது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்காக பிரதமர் அல்பனீசுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.


அதே நேரத்தில், இதுபோன்ற செயல்களுக்கு எதிராக தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுப்பதாக அவர் என்னிடம் மீண்டும் உறுதியளித்துள்ளார். இந்தியா-ஆஸ்திரேலியா உறவுகளின் நோக்கம் நமது இரு நாடுகளுடன் தொடர்புடையதாக மட்டும் நின்றுவிடுவதில்லை. இது பிராந்திய ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் உலக நலனுடன் தொடர்புடையதாகும். சில நாட்களுக்கு முன்பு, ஹிரோஷிமாவில் நடந்த குவாட் உச்சி மாநாட்டில், பிரதமர் அல்பனீசுடன், இந்தோ-பசிஃபிக் பற்றி விவாதித்தோம். இந்தியா - ஆஸ்திரேலியா ஒத்துழைப்பு உலகில் வளர்ச்சியடையாத தென் பகுதி நாடுகளின் முன்னேற்றத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும்.


உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாகப் பார்க்கும் இந்திய பாரம்பரியமான உலகம் ஒரு குடும்பகம் என்பது, இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்துக்கான மையக் கருப்பொருளாகும். ஜி-20 கூட்டமைப்பில் இந்தியாவின் முன்முயற்சிகளுக்கு ஆஸ்திரேலியா வழங்கும் ஆதரவுக்காக நான் பிரதமர் அல்பனீசுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Input & Image courtesy:  News

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.