உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக வைத்தியநாதன் பொறுப்பேற்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த டி.ராஜா நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். இதையடுத்து மூத்த நீதிபதியாக உள்ள
எஸ்.வைத்தியநாதனை, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நேற்று பொறுப்பேற்றார். சென்னை உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதி நியமிக்கப்படும் வரை இப்பொறுப்பை வைத்தியநாதன் வகிப்பார். அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் அவரை வாழ்த்தியபோது, “தொழிற்சங்கவாதியான எனது தந்தையின் நூற்றாண்டில் பொறுப்பேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.