3 தக்காளி இருக்குதா உங்க வீட்ல? உடுப்பி ஸ்டைலில் சூப்பராக இப்படி கூட ஒரு சட்னி செய்யலாமே. இட்லி, தோசை, சுட சுட சாதத்திற்கு இது வேற லெவல் சைடிஷ்.

ஒரே மாதிரி சட்னியை அரைத்து சாப்பிட்டு போர் அடிக்குதா. இட்லி, தோசை பணியாரம் சாப்பாடு இவைகளுக்கு தொட்டு சாப்பிட உடுப்பி ஹோட்டல் ஸ்டைலில் சூப்பரான ஒரு சட்னி ரெசிபியை செய்ய போகின்றோம். மூன்று தக்காளி, கொஞ்சம் தயிர் இருந்தால் போதும். இந்த சட்னியை சுவையாக செய்து அசத்தலாம். காரசாரமான ருசி தரும் இந்த சட்டியை உடுப்பி ஹோட்டல் ஸ்டைலிங் எப்படி செய்வது ரெசிபிக்குள் சென்று தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

chutney1

உடுப்பி ஸ்டைல் டொமேட்டோ தம்புலி செய்முறை:
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து, எண்ணெய் 1 ஸ்பூன் ஊற்றி, அதில் வெந்தயம் 1/4 ஸ்பூன், சீரகம் 1 ஸ்பூன்,  பச்சை மிளகாய் – 2, தக்காளி பழம் நறுக்கியது – 3 போட்டு நன்றாக வதக்க வேண்டும். தக்காளிப்பழம் வதங்கி வந்தவுடன், மிளகாய் தூள் – 1 ஸ்பூன், சேர்த்து 3 டேபிள் ஸ்பூன் அளவு மட்டும் தண்ணீர் ஊற்றி எந்த தக்காளியை பச்சை வாடை போக நன்றாக வேக வைக்கவும்.

தக்காளி வதங்கி வெந்து வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு, இதை நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் மாற்றி 1/4 கப் அளவு தேங்காய் துருவல், தேவையான அளவு உப்பு போட்டு, இதை விழுதாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

அடுத்து ஒரு அகலமான பவுலில் 1/2 கப் அளவு புளிக்காத தயிரை ஊற்றி கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். இந்த தயிருடன் மிக்சி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் தக்காளி சட்னியை ஊற்றி, மிக்ஸி ஜாரை கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அலம்பி இதோடு சேர்த்து நன்றாக கரைக்கவும். இந்த சட்னி திக்காக இருக்கக்கூடாது. கொஞ்சம் தண்ணீர் ஆகத்தான் நமக்கு தேவை. இப்போது சூப்பரான ஆரஞ்சு நிறத்தில் ஒரு சட்னி கிடைத்திருக்கும் அல்லவா. இதற்கு தாளிப்பு கொடுக்க வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து நல்லெண்ணெயில், கடுகு, உளுந்து, கருவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயம் தாளித்து இதை அப்படியே சட்னியில் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் சூப்பரான உடுப்பி ஹோட்டல் தக்காளி சட்னி தயார். இதை சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டாலும் செம டேஸ்ட்டா இருக்கும். ரொம்ப ரொம்ப ஈஸியா செஞ்சிடலாம். இதை உடுப்பி ஹோட்டல் தம்புலி என்று சில பேர் சொல்லுவார்கள். பெயர் எதுவாக இருந்தாலும் சுவை சூப்பராக இருக்கும். அருமையான இந்த ரெசிபி உங்களுக்கு பிடிச்சிருந்தா கட்டாயம் மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. வித்தியாசமாக ஒரு சட்னி சாப்பிட்ட அனுபவம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: மீந்து போன சாதத்தில் இப்படி சப்பாத்தி செய்து கொடுங்க, அப்புறம் பாருங்க வீட்டில் உள்ளவங்க போட்டி போட்டு சமைச்ச உங்களுக்கு இல்லாம இந்த சப்பாத்தியை காலி பண்ணிடுவாங்க.

பின்குறிப்பு: தக்காளியை கடாயில் போட்டு வதக்குகின்றோம் அல்லவா. அப்போது உங்களுக்கு வாசத்திற்காக கொஞ்சம் கொத்தமல்லி தழை தேவை என்றால் அதில் போட்டு வதக்கியும் அரைத்துக் கொள்ளலாம். இப்படி செய்தால் இந்த சட்னியின் ஃப்ளேவர் கொஞ்சம் கூடுதலாக கிடைக்கும்.

The post 3 தக்காளி இருக்குதா உங்க வீட்ல? உடுப்பி ஸ்டைலில் சூப்பராக இப்படி கூட ஒரு சட்னி செய்யலாமே. இட்லி, தோசை, சுட சுட சாதத்திற்கு இது வேற லெவல் சைடிஷ். appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.