வீட்ல உருளைக்கிழங்கு இருந்தா குழந்தைகளுக்கு நல்லா மொறு மொறுன்னு இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு கொடுங்க. ஒரு முறை இதை செஞ்சு கொடுத்துட்டீங்கன்னா போதும் இனி இதை கடையில அதிக காசு வாங்கி சாப்பிடவே மாட்டாங்க.

உருளைக்கிழங்கை பிடிக்காத குழந்தைளே இருக்க முடியாது. உருளைக்கிழங்கை எப்படி செய்து கொடுத்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவிலும் உருளைக்கிழங்கை வைத்து ஒரு அருமையான ஈவினிங் ஸ்நாக்ஸ் எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

potato

இந்த ஸ்நாக்ஸ் செய்வதற்கு முதலில் மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு மூன்று எடுத்து குக்கரில் நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு தோல் உரித்த பிறகு உருளைக் கிழங்கை கொஞ்சம் கூட கட்டிகள் இல்லாமல் நன்றாக பிசைந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு பவுலில் பிசைந்து வைத்த உருளைக்கிழங்கை சேர்த்த பிறகு கால் டீஸ்பூன் உப்பு ஒரு கப் கடலை மாவு, ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள், கால் டீஸ்பூன் சாட் மசாலா, ஒரு டீஸ்பூன் அரிசி மாவு, இவை அனைத்தையும் சேர்த்த பிறகு மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெயை நன்றாக காய வைத்து சூட்டுடன் இந்த மாவில் ஊற்றி விடுங்கள்.

அதன் பிறகு இந்த மாவை ஒரு ஸ்பூன் வைத்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். எண்ணெய் சூடாக இருக்கும் எனவே கை வைத்து பிசையாமல் முதலில் ஸ்பூன் வைத்து மாவை பிசைந்து கொள்ளுங்கள். அதன் பிறகு கை பொறுக்கும் சூட்டிற்கு வந்த பிறகு மாவை பிசைய ஆரம்பிங்க. மாவு தளர்வாக இருந்தால் இன்னும் கொஞ்சம் கடலை மாவை சேர்த்து பிசைந்து கொள்ளலாம்.

இப்போது முறுக்கு பிழியும் அச்சில் இடியாப்பம் பிழிய பயன்படுத்தும் அந்த சிறிய துளைகள் உள்ள தட்டை போட்டு பிசைந்து வைத்த மாவை கொஞ்சமாக அதில் எடுத்து போட்டு முதலில் பிசைந்து பாருங்கள். மாவு சுலபமாக அதே நேரத்தில் அறுந்து விழாமல் பிழிய வந்தால் நீங்கள் கலந்த மாவு சரியான பதத்தில் வந்திருக்கிறது என்று அர்த்தம்.

அடுத்து அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன், அடிப்பை லோ ஃபிலிமில் மாற்றி வைத்து இதை அப்படியே எண்ணெயில் பிழிந்து விடுங்கள். மாவை பிழியும் போது தீ கொஞ்சம் கூட அதிகமாக இருக்கக் கூடாது. ஏனெனில் உருளைக்கிழங்கு சேர்த்து இருப்பதால் தீ அதிகமாக இருந்தால் உடனே கருகி வீணாகி விடும்.

இது ஒரு புறம் சிவந்து எண்ணெய்யின் சலசலப்பு முழுவதுமாக அடங்கிய பிறகு மறுபுறம் திருப்பிப் போட்டு அதே போல சிவந்து சலசலப்பு எல்லாம் அடங்கிய பிறகு எடுத்து விடுங்கள். அவ்வளவு தான் சுவையான உருளைக் கிழங்கு ஆலுபூஜா சூப்பராக தயாராகி விட்டது. இந்த ஸ்நாக்ஸ்க்கு இனி நீங்கள் கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. வீட்டிலே ரொம்ப சுலபமா இது செய்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க.

The post வீட்ல உருளைக்கிழங்கு இருந்தா குழந்தைகளுக்கு நல்லா மொறு மொறுன்னு இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு கொடுங்க. ஒரு முறை இதை செஞ்சு கொடுத்துட்டீங்கன்னா போதும் இனி இதை கடையில அதிக காசு வாங்கி சாப்பிடவே மாட்டாங்க. appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.