சுவாசத் தொற்றுநோய் காரணமாக போப் பிரான்சிஸ் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதி : வாட்டிகன் அறிக்கை

ரோம் : கத்தோலிக்க கிறிஸ்துவ பிரிவின் தலைவர் போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 86 வயது ஆகும் போப் பிரான்சிஸுக்கு அண்மை காலமாக முதுமை சார்ந்த உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன. மூட்டு பிரச்சினை உள்ளிட்டவற்றால் நடப்பதற்கு சிரமப்பட்டு வருவதால் அவர் சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சுவாசக் கோளாறுகள் இருப்பதை அடுத்து போப் பிரான்சிஸ் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை மேற்கொண்டதில் போப் பிரான்சிஸுக்கு சில நாட்கள் தகுந்த மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வாட்டிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சுவாசத் தொற்றுநோய் காரணமாக போப் பிரான்சிஸ் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்லார். அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இல்லை. இருப்பினும் மேலும் சில நாட்களுக்கு போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் ஓய்வில் இருப்பார், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.