இடி, மழையுடன் பனிப்புயல்: கனடாவில் திடீரென மாறிய வானிலையால் இயல்பு வாழ்க்கை முடக்கம்.. மக்கள் அவதி..!!

கனடா: கனடாவில் திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. கனடாவில் சட்டென்று மாறிய வானிலையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. அந்நாட்டின் டொராண்டோ பகுதியில் நேற்று மாலையில் இடி, மழையுடன் திடீரென பனி புயலும் தாக்கியது. ஒருபுறம் சாரல் மழை பொழிய காற்றின் வேகத்தின் பனிக்கட்டிகளும் அடித்து வரப்பட்டதால் மக்கள் தவிப்புக்குள்ளாகினர். ஒரே நேரத்தில் இடி, மழை, பனிப்புயல் என மாறிய வானிலையை கண்ட மக்கள் திகைப்புக்குள்ளாகினர். வீதிகள் முழுவதும் பனி கொட்டிக் கிடந்ததால் வாகனங்களை இயக்க முடியவில்லை. திடீரென உருவான பனிப்புயலால் வழக்கத்தை விட அதிகளவு பனி கொட்டியதாக கூறப்படுகிறது. குளிர்காலத்தில் இதுபோல் மாறுபட்ட வானிலை நிலவுவது இது இரண்டாவது முறை என தகவல் வெளியாகியுள்ளது. சாலையில் மழைதுளியுடன் கொட்டிய பனிகளால் சில்லென்ற வானிலை ஏற்பட்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.