ஆற்று மணலை காக்க தவறும் தமிழக அரசு... சரமாரியாக கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம்?

மதுரை உயர்நீதிமன்றத்தில் தற்பொழுது ஆற்று மணல் தொடர்பான மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக கரூரை சேர்ந்த குணசேகரன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவில் தன்னுடைய குறைகளை பற்றி தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக கரூர் காவிரி ஆற்றில் தொடர்ச்சியாக சட்டவிரதமாக மணல் எடுக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் அந்த பகுதிகளில் செயல்படும் குவாரிகளில் ஆற்றில் சுமார் 20 அடி வரை பள்ளம் ஏற்பட்டு சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். மேலும் சீமை கருவேல மரங்கள் புதர்கள் போல நிரம்பிவிட்டன. இந்த குவாரிகள் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் செயல்படவில்லை என்பதன் காரணமாக மணல் அரிப்பால் கரூர் நாமக்கல் ரயில் பாலம் மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான போக்குவரத்து துறை பாலங்கள் அடித்தளம் பாதிப்புக்கு உள்ளாகும் ஒரு சூழ்நிலையில் தற்போது காட்சியளிக்கிறது.


கண்காணிப்பு கேமரா இல்லாத இடங்களாக தேர்வு செய்து அந்த பகுதிகளில் இருக்கும் ஆற்று மணல்களை சட்டவிரதமாக மூன்றாம் தரப்பின் அவர்கள் அள்ளி வருகிறார்கள். எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பொதுமக்களின் குடிநீர் ஆதாரத்தையும் இது பாதிக்கும் வகையில் அமைந்து இருக்கிறது. இதன் காரணமாக கரூர் காவிரி ஆற்றில் உள்ள குவாரிகளை சட்டப்படி தடை செய்ய வேண்டும் என்று அவருடைய பொது நல மனுவில் கூறியிருந்தார்.


இந்த மனு நீதிபதிகள் முன்னிலையில் அமர்வுக்கு வந்தது. இது தரப்பில் இது குறித்த அரசு தரப்பு வக்கீல் கூறுகையில், மாதம் தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தி மணல் குவாரிகள் அரசு விதிபடி செயல்படுகிறதா என்று கண்காணிக்கப்படுகிறது என தெரிவித்தார். ஆனால் நீதிபதிகள் கூறுகையில் பாதுகாக்கப்பட வேண்டிய தாது மணலை மத்திய அரசு கண்காணிப்பது போல, ஆற்று மணலை பாதுகாப்பது மாநில அரசின் கடமை ஏன் நடவடிக்கை கூடாது? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Input & Image courtesy:  News

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.