``தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம்! - அமித் ஷா திட்டவட்டம்

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சுகளும், அதற்கு அ.தி.மு.க தரப்பிலிருந்து வந்த எதிர்க்கருத்துகளும், அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் பிளவு ஏற்படப் போகிறது என்ற பேச்சுகளுக்கு வழிவகுத்தன. அண்ணாமலை கூட, அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தால் பா.ஜ.க வளராது, பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று கட்சித் தலைவர்களிடம் பேசியதாகக் கூறப்பட்டன.

அண்ணாமலை - எடப்பாடி

அதன் பிறகு, `கூட்டணி குறித்து அறிவிக்கும் உரிமை எனக்கு இல்லை, டெல்லி தலைமையே அதனை முடிவு செய்யும் என அண்ணாமலை விளக்கமளித்தார். இத்தகைய சூழலில் தான், கடந்த இரு நாள்களுக்கு முன்பு அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க கூட்டணியில் தான் இருக்கிறதும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருக்கிறார். பிரபல தனியார் ஊடகம் நடத்திய நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட அமித் ஷாவிடம், அதிமுக - பா.ஜ.க இடையில் கருத்து மோதல் நிலவிவரும் சூழலில், அதன் கூட்டணி நீடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா

அதற்குப் பதிலளித்த அமித் ஷா, `தமிழ்நாட்டில் அ.தி.மு.க கூட்டணியில் தான் நாங்கள் இருக்கிறோம் என்று கூறினார்.

இதே நிகழ்ச்சியில், கர்நாடகாவில் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிப்போம் என அமித் ஷா தெரிவித்தார். கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.