செப்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா?

நமது முன்னோர்கள் சமையலுக்கு பயன்படும் பாத்திரமாக இருந்தாலும் குடிதண்ணீர் வைக்கும் பாத்திரமாக இருந்தாலும் செப்பு பாத்திரத்தையே பயன்படுத்தி வந்தனர். ஆனால் நாளடைவில் மக்கள் செப்பு பாத்திரங்களை பயன்படுத்துவதை விட்டுவிட்டு பிளாஸ்டிக் உள்ளிட்ட சில சிலவற்றை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் உடலுக்கு பல்வேறு கேடுகள் விளைவித்து ரசாயன மாற்றங்களும் உருவாக்கின. 

 

செப்பு நுண்ணிய ஊட்டச்சத்து கொண்டது என்பதால் இது உடல் நலனுக்கு உதவி செய்கிறது. நோய் எதிர்ப்பு அமைப்பையும் வலுப்படுத்தும் என்றும் செரிமானம் சிறப்பாக நடைபெற துணை புரியும் என்றும் கூறப்படுகிறது. 

 

செப்பு பாத்திரத்தில் நீர் சேமித்து வைத்து குடித்தால் உடல் குளிர்ச்சி அடையும் என்றும் உடலில் உள்ள நச்சுக்கள் நீக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்றும் அதில் ரசாயனம் கலந்திருப்பதால் தண்ணீரும் அதனுடன் சேர்ந்து உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும் என்றும் எனவே பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாக செப்பு பாத்திரத்தை பயன்படுத்துவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது 

 

Edited by Mahendran

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.