அர்ஜன்டீனா அணிக்காக 100 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் மெஸ்ஸி!

அர்ஜன்டீனா: சர்வதேச கால்பந்து போட்டிகளில் அர்ஜன்டீனா அணிக்காக 100 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை லயோனல் மெஸ்ஸி படைத்துள்ளார். தற்போது 35 வயதான மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இதுவரை 800க்கும் மேற்பட்ட கோல்களை அடித்து அசத்தியுள்ளார். ஆனால் தனது தாய் நாட்டிற்காக அதிக கோல்களை அடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் இருந்து வந்தது. இந்நிலையில் அர்ஜன்டீனாவின் வடக்கு பகுதியில் நடைபெற்ற நட்புறவு கால்பந்து போட்டியில் பிரகாவு என்ற அணிக்கு எதிரான அர்ஜன்டீனா போட்டியிட்டது. ஒருதரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் பாதியிலேயே ஹாட்ரிக் கோல்களை அடித்து மெஸ்ஸி ஆர்பரித்தார்.இந்நிலையில் அர்ஜன்டீனா அணிக்காக 100 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார் லயோனல் மெஸ்ஸி. 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.