இட்லி, தோசை, கார தோசை, சூடான சாதத்துக்கு தொட்டுக்க ஆரோக்கியம் நிறைந்த அட்டகாசமான சுவை உள்ள பூண்டு தொக்கு எளிதாக 5 நிமிடத்தில் வீட்டில் எப்படி தயாரிப்பது?

இட்லி, தோசை, கார தோசை தயார் செய்வதற்கு இந்த பூண்டு தொக்கு ரொம்பவே சரியான காம்பினேஷனாக இருக்கும். இதை தொட்டுக்கிட்டு சாப்பிட்டா ரசிச்சு ருசித்து சாப்பிடலாம். எவ்வளவு கொடுத்தாலும் பத்தாமல் சாப்பிடலாம். சூடான சாதத்துடன் அப்படியே பிசைந்து சாப்பிடவும் சூப்பராக இருக்கக்கூடிய இந்த பூண்டு தொக்கு ரெசிபி பத்து நாட்கள் கூட ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால் கெட்டுப் போகவே செய்யாது. இதை எப்படி தயாரிக்கப் போகிறோம்? என்பதை தான் இந்த பதிவில் இனி பார்க்க இருக்கிறோம்.

பூண்டு தொக்கு செய்ய தேவையான பொருட்கள்:
பூண்டு பற்கள் – அரை கப்(40பல்), சீரகம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தனி மிளகாய் தூள் – இரண்டு ஸ்பூன், தாளிக்க: நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், வரமிளகாய் – இரண்டு, ஒரு கொத்து – கருவேப்பிலை, பூண்டு பல் – ரெண்டு.

பூண்டு தொக்கு செய்முறை விளக்கம் (garlic thokku recipe in Tamil):
இந்த சுவையான பூண்டு தொக்கு ரெசிபி செய்வதற்கு முதலில் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். பூண்டு பற்களை தனித்தனியாக பிரித்து வைத்துக் கொள்ளுங்கள், தோல் உரிக்க தேவையில்லை. சிறிதும் பெரிதுமாக 40 பற்கள் பூண்டு இருந்தால் போதும். ஒரு கப் அளவிற்கு இந்த பூண்டு பற்களை மிக்ஸி ஜாரில் தோலுடன் அப்படியே சேர்த்து இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சீரகம் சேர்த்து, காரத்திற்கு ஆறு வர மிளகாய்கள் அல்லது ரெண்டு டீஸ்பூன் தனி மிளகாய்த்தூள் சேர்க்கலாம்.

மிக்ஸியை இயக்கி நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் எதுவும் இதில் சேர்க்கக்கூடாது. சரியாக அரைப்படவில்லை என்றால் மிக்ஸியில் அரைத்து எடுத்ததும், சிறு உரலில் இட்டு மசிய இடித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதற்கு நல்ல தாளிப்பு கொடுக்க வேண்டும். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் தாளிக்க ஒரு தாளிப்பு கரண்டி ஒன்றை வையுங்கள். தாளிப்பு கரண்டியில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் விட்டு காய விடுங்கள். பூண்டு நல்லெண்ணெயில் சேர்க்கும் பொழுது தான் அதன் பச்சை வாசம் நீங்கும், சுவையும் நன்றாக இருக்கும். எனவே மற்ற எண்ணெய்களை விட நல்லெண்ணெய் சேர்த்து செய்யுங்கள். நல்லெண்ணெய் நன்கு காய்ந்து வந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள்.

கடுகு பொரிந்ததும் சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலை, இரண்டு பல் பூண்டை இடித்து சேர்க்க வேண்டும். பின்னர் இரண்டு வரமிளகாய்களை காம்பு நீக்கி ஒன்றிரண்டாக கிள்ளி சேருங்கள். தாளித்ததும் அந்த தாளிப்பு கரண்டியிலேயே நீங்கள் மசித்த பூண்டு தொக்கை சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் முழுவதுமாக பூண்டில் இறங்கி பூண்டின் பச்சை வாசம் மாறி, நல்ல ஒரு சட்னி பிளேவருக்கு வரவேண்டும். இந்த சமயத்தில் அடுப்பை அணைத்து, அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
தினமும் காலையில் ஒரு கப் மட்டும் இதை குடிச்சு பாருங்க, அந்த நாள் முழுக்க பறந்து பறந்து வேலை செஞ்சா கூட கொஞ்சம் கூட டயர்ட் ஆகவே மாட்டீங்க.

இந்த சுவையான பூண்டு சட்னி பத்து நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகவே செய்யாது. இதை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதனை இட்லி, தோசைக்கு தொட்டுகிட்டா செம டேஸ்டாக இருக்கும். அது மட்டும் அல்லாமல் சூடான சாதத்துடன் அப்படியே பிசைந்தும் சாப்பிட்டுக் கொள்ளலாம். இட்லி, தோசை மாவில் தோசை வார்க்கும் பொழுது மேலே இந்த சட்னியை பரப்பி வேகவைத்து எடுத்தால் கார தோசை ரெடி! இது போல மல்டி பர்ப்பஸ் யூசுக்கு இந்த பூண்டு சட்னி ரெசிபி அட்டகாசமாக இருக்கப் போகிறது. நீங்களும் இதே மாதிரி உங்க வீட்டில் பூண்டு தொக்கு செய்து பாருங்க, பாராட்டு வாங்குவது உறுதி!

The post இட்லி, தோசை, கார தோசை, சூடான சாதத்துக்கு தொட்டுக்க ஆரோக்கியம் நிறைந்த அட்டகாசமான சுவை உள்ள பூண்டு தொக்கு எளிதாக 5 நிமிடத்தில் வீட்டில் எப்படி தயாரிப்பது? appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.