பொல்லாத பெண் சாபத்திலிருந்து விடுபட செய்ய வேண்டிய பரிகாரம். உங்களுடைய குடும்பம் பெண் சாபத்திலிருந்து தப்பித்து தலை தூக்க இந்த 2 விளக்கு ஏற்றினால் போதும்.

நம்முடைய முன்னோர்கள் பலவகையான சாபங்களை பற்றி நமக்கு சொல்லி இருந்தாலும் அதில் மிக மிக மோசமான சாபமாக சொல்லப்பட்டுள்ளது இந்த பெண் சாபம்தான். பிற சாபத்திலிருந்து கூட தப்பிக் கொள்ளலாம். ஆனால் வயிறு எரிந்து ஒரு பெண் விடக்கூடிய சாபத்திலிருந்து ஒரு குடும்பம் தப்பிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். ஒரு பெண், ஒருமுறை விட்ட சாபத்தால் அந்த குடும்பம் ஒரு முறை மட்டும்தான் கஷ்டப்படுமா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. அந்தப் பெண் விட்ட சாபத்தால் பல தலைமுறைக்கு கஷ்டங்கள் தொடரும். ஆகவே, ஒரு பெண்ணுக்கு துரோகம் நினைக்காதீங்க. வீட்டில் இருக்கும் பெண்களை அவமானப்படுத்தி கஷ்டப்படுத்தி துன்புறுத்தாதீங்க. அவர்கள் மனது நோகும் படி நடந்து கொள்ள வேண்டாம். அவர்களுடைய வாயிலிருந்து உங்களுடைய குடும்பம் நாசமாக போகட்டும் என்று ஒரு வார்த்தை வந்தால் கூட, அது குடும்பத்திற்கு பொல்லாத பல கஷ்டங்களை கொடுத்து விடும்.

Saptha kannimar

கட்டின மனைவி, பெற்ற தாய், பெண் பிள்ளைகள், உடன் பிறந்த அக்கா தங்கை இப்படி யாரையுமே மனது நோகும்படி நடத்தாதீங்க. பெண் சாபம் இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது. தீராத துன்பங்கள் கஷ்டங்கள் வீட்டில் வந்தால் நிச்சயமாக ஜாதகத்தை கொண்டு போய் ஜோதிடரிடம் காண்பிப்போம். அவரே சொல்லிவிடுவார். உங்களுடைய குடும்பத்திற்கு பெண் சாபம் இருக்கிறதா இல்லையா என்பதை.

அப்படி இல்லை என்றால் ஒரு சில அறிகுறிகளை வைத்து உங்கள் குடும்பத்திற்கு பெண் சாபம் இருப்பதை நீங்களே கண்டுபிடிக்கலாம். வீட்டில் இருக்கும் பெண் குழந்தை குறையோடு பிறந்திருக்கும். பிறந்த பெண் குழந்தை சிறு வயதிலேயே இருந்திருக்கும். அதிலும் துர்மரணம் ஏற்பட்டு இருந்திருக்கும். பெண் வாரிசுகள் திருமணம் நடக்காமல் கஷ்டப்படும். திருமணமானவர்களுக்கு குழந்தை இருக்காது.

Saptha Kannimar
Saptha Kannimar

இப்படி பல வகையான துன்பங்கள் தொடர்ந்து உங்களுடைய குடும்பத்தில் இருந்தால் உங்கள் குடும்பத்திற்கு பெண் சாபம் இருப்பதாக அர்த்தம். சில வீடுகளில் இருக்கும் ஆண் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்காமல் கூட இருக்கும். இந்த பொல்லாத பெண் சாபத்திலிருந்து விடுபட எளிமையான முறையில் ஆன்மீகம் பரிகாரம் செய்யலாம்.

பெண் சாபத்திலிருந்து விடுபட சப்த கன்னியர் வழிபாடு:
இந்த பரிகாரத்தை சப்த கன்னியர் இருக்கக்கூடிய கோவிலில் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை ராகுகால நேரத்தில் சப்த கன்னியருக்கு 2 நெய் விளக்கு ஏற்றி வைத்து, சப்த கன்னியரை மனதார வணங்குங்கள். யாரோ எந்த ஜென்மத்திலோ செய்த பாவம் உங்கள் குடும்பத்திற்கு தொடரும் என்றால், அந்த பாவத்திற்கான மன்னிப்பை நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள். 8 வாரம் தொடர்ந்து வெள்ளிக்கிழமை ராகுகால நேரத்தில் இந்த விளக்கை ஏற்றி வாருங்கள்.

இதையும் படிக்கலாமே: பணம் பல மடங்கு பெருக பட்டை தூபம்! பல நாள் பண கஷ்டத்தை, ஒரு நாளில் ஒழித்துக் கட்ட இதை செய்தால் போதும்.

9தாவது வாரம் சப்த கன்னியருக்கும் வஸ்திரம் எடுத்துக் கொடுத்து, சப்த கன்னியிருக்கும் தனித்தனியாக மாலை வாங்கி போட்டு, தனித்தனியாக ஏழு விளக்குகள் ஏற்றி வைத்துவிட்டு, 1 தேங்காய் உடைத்து, அர்ச்சனை செய்து உங்களுடைய வழிபாட்டை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள். இந்த ஒன்பது வார வெள்ளிக்கிழமை ராகு கால சப்த கன்னியர் பூஜை செய்தால் பெண் சாபத்தால் ஏற்பட கூடிய பிரச்சனைகளும் தாக்கங்களும் குறையும் என்று சொல்கிறது இந்து சாஸ்திரம். பரிகாரத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

The post பொல்லாத பெண் சாபத்திலிருந்து விடுபட செய்ய வேண்டிய பரிகாரம். உங்களுடைய குடும்பம் பெண் சாபத்திலிருந்து தப்பித்து தலை தூக்க இந்த 2 விளக்கு ஏற்றினால் போதும். appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.