வீட்டில் கோதுமை மாவு இருக்கா? இட்லி தோசைக்கு பதிலா வெறும் 10 நிமிடத்தில் இப்படியும் ஒரு பணியாரம் சுடலாமே.

வீட்டில் இட்லி தோசை மாவு இல்லாத சமயத்தில் உடனடியாக ஏதாவது காலை உணவு செய்ய வேண்டும் என்றாலும் இந்த பணியாரம் செய்யலாம். இரவு டின்னருக்கும் இந்த பணியாரம் செய்யலாம். ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆகவும் குழந்தைகளுக்கு இந்த பணியாரத்தை செய்து கொடுக்கலாம். காய்கறிகள் சேர்த்து மிக மிக ஆரோக்கியமாக இந்த பணியாரத்தை செய்யப்போகின்றோம். வாங்க அந்த கோதுமை மாவு வெஜிடபிள் சேத்த பணியாரத்தை எப்படி செய்வது என்று பார்த்து விடுவோம்.

கோதுமை மாவு பணியாரம் செய்முறை: (Wheat spicy paniyaram recipe in tamil)
முதலில் குக்கரில் இரண்டு உருளைக்கிழங்குகளை போட்டு கொஞ்சமாக உப்பு போட்டு வேகவைத்து எடுத்து தோல் உரித்து நன்றாக மசித்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த உருளைக்கிழங்கு அப்படியே இருக்கட்டும். அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் 1 ஸ்பூன், ஊற்றி கடுகு, உளுந்து, போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 1 கைப்பிடி அளவு, கருவேப்பிலை 1 கொத்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2 போட்டு நன்றாக வதக்குங்கள்.

அதன் பிறகு பொடியாக நறுக்கிய முட்டைக்கோசு, கேரட் துருவல் ஒரு கைப்பிடி அளவு, இந்த காய்கறிகளுக்கு மட்டும் தேவையான அளவு உப்பு போட்டு, அடுப்பை சிம்மில் வைத்து விட்டு நான்கிலிருந்து ஐந்து நிமிடம் எண்ணெயிலேயே வதக்கி இந்த பொருட்களை எல்லாம் வேக வைத்து விடுங்கள். அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது இதுவும் அப்படியே இருக்கட்டும்.

vegtable

ஒரு அகலமான பவுல் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கோதுமை மாவு 1 கப் போட்டு, கோதுமை மாவுக்கு மட்டும் தேவையான அளவு உப்பு போட்டு, வேக வைத்த உருளைக்கிழங்கு, வதக்கிய காய்கறிகள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை, போட்டு முதலில் எல்லா பொருட்களையும் ஒன்றாக கலந்து விடுங்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை அடை மாவு பதத்திற்கு கொஞ்சம் திக்காக கரைத்துக் கொள்ளுங்கள். அதாவது இட்லி மாவு பதத்திற்கு மாவை கரைத்துக் கொண்டால் போதும்.

இதோட ருசி இன்னும் கொஞ்சம் கூடுதலாக கிடைக்க தேங்காய் துருவலும் சேர்த்துக் கொள்ளலாம். அல்லது உங்களுக்கு இன்னும் குடைமிளகாய் காளான் வேறு ஏதாவது காய்கறிகள் தேவை என்றாலும் காய்கறிகள் வதக்கினோம் அல்லவா அப்போது போட்டு வதக்கி இதோடு சேர்த்து செய்து கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான்.

இதையும் படிக்கலாமே: 5 நிமிஷத்துல சுவையான இந்த மதுரை கையேந்தி பவன் தண்ணி கார சட்னியை அரைச்சு பாருங்க. சுட சுட இட்லியோட இந்த சட்னி இருந்தா போதும் எத்தனை இட்லி சாப்பிட்டோம் என்று கணக்கே தெரியாது

இப்போது பணியார கல்லை அடுப்பில் வைத்து விடுங்கள். அதில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு கரைத்து வைத்திருக்கும் இந்த மாவை, பணியார கல்லில் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு மூடி போட்டு பொன்னிறம் வரும் வரை சிவக்க விட்டு மீண்டும் இன்னொரு பக்கம் திருப்பி போட்டு சிவக்க விட்டு எடுத்தால் சூப்பரான கோதுமை மாவு வெஜிடபிள் பணியாரம் தயார். குழந்தைகளுக்கு இதை ஒரு டொமேட்டோ சாஸ் உடன் பரிமாறினால் விரும்பி விரும்பி சாப்பிட்டு விடுவார்கள். உருளைக்கிழங்கு வேக வைக்க நேரம் இல்லை என்றால் கூட இதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி மாவை கரைத்துக் கொள்ளலாம். இன்னும் கூடுதல் சுவை கிடைக்கும். ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாதீங்க.

The post வீட்டில் கோதுமை மாவு இருக்கா? இட்லி தோசைக்கு பதிலா வெறும் 10 நிமிடத்தில் இப்படியும் ஒரு பணியாரம் சுடலாமே. appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.