இந்திய ஜாம்பவான் சாதனையை சமன் செய்த கேன் வில்லியம்சன்…, இரட்டை சதம் விளாசி அசத்தல்!!

இலங்கை அணிக்கு எதிராக இரட்டை சதம் விளாசிய கேன் வில்லியம்சன் இந்தியாவின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக்கின் சாதனையை சமன் செய்துள்ளார்.

கேன் வில்லியம்சன்:

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வெல்ல 1-0 என முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து, கடந்த 17ம் தேதி 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியது.

டிவிட்டர் :  Enewz Tamil ட்விட்டர்

இதில், தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணியில், 4 விக்கெட் இழப்புக்கு 580 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்த போட்டியில், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் (215) மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் (200*) இரட்டை சதங்களை விளாசி அசத்தி இருந்தனர். இதில், கேன் வில்லியம்சன் இரட்டை சதம் விளாசியதன் மூலம், இந்தியா ஜாம்பவானான வீரேந்திர சேவாக் சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார்.

தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டாரை சந்தித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரம்…, தமிழில் பகிர்ந்த பதிவு உள்ளே!!

அதாவது, சர்வதேச டெஸ்ட் அரங்கில் 104 போட்டிகளில் விளையாடி உள்ள வீரேந்திர சேவாக் 6 முறை இரட்டை சதம் விளாசி உள்ளார். இவரது, இந்த சாதனையை தற்போது, கேன் வில்லியம்சன் 94 போட்டிகளில் 6வது முறையாக இரட்டை சதம் அடித்து சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில், ஆஸ்திரேலியாவின் டொனால்ட் ஜார்ஜ் பிராட்மேன் 52 போட்டிகளில் 12 இரட்டை சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.

The post இந்திய ஜாம்பவான் சாதனையை சமன் செய்த கேன் வில்லியம்சன்…, இரட்டை சதம் விளாசி அசத்தல்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.