“கிடைத்ததை இழப்பதற்கும்...” - ‘ஏகே 62’ அறிவிப்பு வெளியாகி ஓராண்டு ஆன நிலையில் விக்னேஷ் சிவன் பதிவு

அஜித்தின் ‘ஏகே 62’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்ற அறிவிப்பு வெளியாகி ஓராண்டு கடந்த நிலையில், விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘துணிவு’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமாரின் அடுத்த படமான ‘ஏகே 62’ படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவார் என கடந்தாண்டு இதே நாளில் லைகா நிறுவனம் சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. படத்திற்கு அனிருத் இசையமைப்பார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், ஒரு சில காரணங்களால் ‘ஏகே 62’விலிருந்து விக்னேஷ் சிவன் விலக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதனால், அஜித்தின் அடுத்த படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.