வெறும் அஞ்சே நிமிஷத்துல டீக்கடை இனிப்பு போண்டாவை சூப்பரா நம்ம வீட்டில அதே டேஸ்ட்டோட செய்யணுமா? அப்படின்னா இப்படி செய்து பாருங்க டீக் கடை போண்டா செய்முறை டிப்ஸ்.

இந்த டீக்கடை இனிப்பு போண்டாவை தெரியாதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. சில உணவு பொருட்கள் கடைகளில் கிடைக்கும் ருசி நாம் வீட்டில் செய்யும் போது கிடைக்காது, அதற்கு காரணம் அதில் சேர்க்கும் சில பொருட்கள் தான். இந்த டீக்கடை இனிப்பு போண்டாவும் அப்படி தான், இதே போண்டாவை நாம் வீட்டில் எப்படி செய்தாலும் ஒன்று அதிகம் எண்ணெய் குடித்து போண்டா சொத சொத வென்று ஆகி விடும் இல்லை கல்லு போல கெட்டியாக இருக்கும். டீக்கடையில் கொடுக்கும் இதே போண்டா மேலே நல்ல மொறுமொறுப்பாகவும் உள்புறம் நல்ல பஞ்சு போல சாஃப்ட் ஆகவும் இருக்கும். இப்படி ஒரு சூப்பர் டீக்கடை போண்டா ரெசிபியை எப்படி செய்வது என்று தான் இந்த பதிவில் நான் இப்போது தெரிந்து கொள்ளப் போகிறோம்.

இந்த டீக்கடை போண்டா செய்வதற்கு நமக்கு தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – 1 கப், இட்லி மாவு – 1/4 கப், சமையல் சோடா – 2 பின்ச், சர்க்கரை -1/4 கப், ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன், எண்ணெய் பொரித்து எடுக்க.

முதலில் ஒரு கப் கோதுமை மாவை நன்றாக சலித்து ஒரு பவுலில் எடுத்து கொள்ளலாம். இந்த போண்டாவை கோதுமை மாவிற்கு பதிலாக மைதா மாவிலும் செய்யலாம். மைதா மாவில் செய்யும் போது போண்டாவின் நிறம் நல்ல பிரவுன் நிறத்திற்கு வராது, கொஞ்சம் வெள்ளையாகவே இருக்கும். கோதுமை மாவில் செய்யும் போது அதன் நிறம் நன்றாக சிவந்து வரும்.

கோதுமை மாவு எடுத்து வைத்த பவுலில் இட்லி மாவுடன் சமையல் சோடா, ஏலக்காய் பொடி அனைத்தையும் சேர்த்த பிறகு நன்றாக கலந்து விட்டுக் கொள்ளுங்கள். இப்பொழுது கால் கப் சர்க்கரை எடுத்து அதில் அரைக் கப் அளவிற்கு வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி சர்க்கரையை கரைத்துக் கொள்ளுங்கள்.(சர்க்கரை பிடிக்காது என்பவர்கள் வெல்லம் சேர்த்தும் செய்யலாம்) சர்க்கரை கரைத்த தண்ணீரை எடுத்து வைத்திருக்கும் கோதுமை மாவு கலவையில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இட்லி மாவு, சர்க்கரை கரைசல் தண்ணீர் இதுவே போதும் உங்களுக்கு தண்ணீர் போதவில்லை என்றால் மட்டும் கொஞ்சமாக தண்ணீர் தெளித்துக் பிசைந்து கொள்ளுங்கள். இதை உளுந்து வடை மாவு பக்குவத்திற்கு இந்த போண்டா மாவை கரைத்து வைத்து கொள்ள வேண்டும்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து எண்ணெய் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடு படுத்திக் கொள்ளுங்கள். இப்போது தயார் செய்து வைத்திருக்கும் மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்து போண்டா போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டியது தான். இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம். போண்டா போடும் போது எண்ணெய் நன்றாக காய்ந்திருக்க வேண்டும், அப்போது தான் போண்டா போட்டவுடன் நன்றாக உப்பி மேலே சிவந்தும் உள்ளே எண்ணெய் குடிக்காமல் சாப்டாகவும் இருக்கும்.

இதை செய்ய உங்களுக்கு ஐந்து நிமிடம் கூட ஆகாது. டீக்கடையில் கிடைக்கும் அதே இனிப்பு போண்டா சுவை இந்த போண்டாவிலும் கொஞ்சமும் மாறாமல் இருக்கும். நீங்களும் உங்கள் வீட்டில் இதை முயற்சி செய்து பாருங்கள்

The post வெறும் அஞ்சே நிமிஷத்துல டீக்கடை இனிப்பு போண்டாவை சூப்பரா நம்ம வீட்டில அதே டேஸ்ட்டோட செய்யணுமா? அப்படின்னா இப்படி செய்து பாருங்க டீக் கடை போண்டா செய்முறை டிப்ஸ். appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.