முடி வளர்ச்சியை தூண்டி விடக் கூடிய அத்தனை சத்தும் இந்த ஒரு அடை தோசையில் அடங்கியிருக்கிறது. அபாரமான அடர்த்தியான முடியை பெற, வாரத்தில் 1 நாள் இந்த தோசையையாவது சுட்டு சாப்பிடுங்க.

எவ்வளவு பேக் போட்டும் தலைமுடி வளரவில்லை, உதிர்கிறது என்றால் காரணம் உங்களுடைய உடம்பில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது. தலை முடிக்கு ஹேர் பேக் போட முடியவில்லை. தலைமுடிக்கு காஸ்ட்லியான ஷாம்பு, காஸ்ட்லியான எண்ணெய் வாங்க முடியவில்லை என்பவர்களும் வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாளோ இந்த அடை தோசையை சுட்டு சாப்பிட்டால், 3 மாதத்தில் அபாரமான முடி வளர்ச்சியை நிச்சயமாக பார்க்க முடியும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த அடை தோசையை சுட்டு சாப்பிடலாம். ஆனால் கிட்னி பிரச்சனை உள்ளவர்கள் மட்டும் இந்த தோசையை சாப்பிடக்கூடாது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். வாங்க முடி வளர்ச்சிக்கு தேவையான அந்த அடை தோசையை எப்படி தயார் செய்வது என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

beans

ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கிட்னி பீன்ஸ் 1 கைப்பிடி அளவு, பச்சைப்பயிறு 1 கைப்பிடி அளவு, கருப்பு கொண்டை கடலை 1 கைப்பிடி அளவு, பச்சை வேர்கடலை 1 கைப்பிடி அளவு, இந்த நான்கு பொருட்களையும் போட்டு நன்றாக ஊற வைக்க வேண்டும். குறைந்தது 8 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரம் வரை இது தண்ணீரில் ஊற வேண்டும். ஊறிய பின்பு, ஊறிய தண்ணீரை கீழே ஊற்றி விட்டு, மீண்டும் ஒரு முறை நல்ல தண்ணீரில் அலசி இந்த பயறு வகைகளை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அதன்பின்பு 1/2 கப் அளவு அரிசி நமக்கு தேவை. இட்லி அரிசி பயன்படுத்தலாம். சாப்பாட்டு அரிசியை கூட பயன்படுத்தலாம். 3 மணி நேரம் அதை தண்ணீரில் ஊறவைத்து கழுவி வைத்துக்கொள்ள வேண்டும். சாதாரண வெள்ளை அரிசிக்கு பதிலாக கம்பு, சோளம், குதிரைவாலி, திணை, வரகு அரிசி, என்று சிறுதானிய அரிசியை கூட நீங்கள் பயன்படுத்தலாம். அது உங்களுடைய விருப்பம் தான்.

pachai_payaru

அடுத்தபடியாக கருவேப்பிலை 2 கொத்து, வரமிளகாய் 4, தோல் சீவி இஞ்சி துண்டு 2 இன்ச், சீரகம் 1 ஸ்பூன், பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, இந்த பொருட்களை எல்லாம் மிக்ஸி ஜாரில் போட்டு, கொரகொரப்பாக ஒரு ஓட்டு ஓட்டுங்க. அதன் பின்பு ஊறிய  நான்கு பயிறு வகைகளையும், போட்டு தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்து இதை தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள்.

அதன் பின்பு அதே மிக்ஸி ஜாரில் ஊற வைத்திருக்கும் அரிசியையோ அல்லது வேறு ஏதாவது சிறுதானிய அரிசியாக இருந்தாலும் சரி அதை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து, ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் பயறு விழுதோடு ஊற்றி நன்றாக கரைத்து விட்டால் சூப்பரான ஒரு தோசை மாவு தயாராக இருக்கட்டும். (அரைத்த பயிரோடு, அரைத்த அரிசி மாவையும் ஊற்றி கரைக்க வேண்டும் அவ்வளவுதான். இந்த மாவில் நிறத்திற்காக கொஞ்சம் மஞ்சள் தூளையும் சேர்த்து கரைத்து வைக்கலாம்) இது 5 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரம் புளிக்க வேண்டும். அதன் பின்பு தோசை கல்லில் அடை தோசை போல வார்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

இது உடம்புக்கு அவ்வளவு நல்லது. காலை உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம். இரவு உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம். ஒரு நாள் மட்டும் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துங்கள். ரொம்ப நாள் வச்சிருக்காதீங்க. மேலே சொன்ன அளவுகளில் மாவு அரைக்க நான்கு பேர் தாராளமாக ஒரு வேலை உணவாக இதை சாப்பிடலாம். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க. உடம்புக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கும். அதே சமயம் முடி உதிர்வு உடனடியாக குறைந்து, முடி அடர்த்தியாக வேகமாக வளர தொடங்கும்.

The post முடி வளர்ச்சியை தூண்டி விடக் கூடிய அத்தனை சத்தும் இந்த ஒரு அடை தோசையில் அடங்கியிருக்கிறது. அபாரமான அடர்த்தியான முடியை பெற, வாரத்தில் 1 நாள் இந்த தோசையையாவது சுட்டு சாப்பிடுங்க. appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.