சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷா இந்த தக்காளி தயிர் கிரேவிய செஞ்சி பாருங்க, அப்புறம் எப்ப சப்பாத்தி செஞ்சாலும் இது தான் சைடிஷா இருக்கும். அசைவம் கூட வேண்டாம் என்று சொல்லிடுவீங்க.

இந்த தக்காளி தயிர் கிரேவியை செய்வதற்கு காய்கறிகள் கூட எதுவும் தேவை இல்லை கொஞ்சம் வெங்காயம், தக்காளி ,ஒரு கப் தயிர் இருந்தால் போதும் இந்த கிரேவியை 10 நிமிடத்திற்குள்ளே தயார் செய்து விடலாம். இந்த கிரேவி நல்ல ஒரு அசைவ குழம்பு சுவையில் மிகவும் அருமையாக இருக்கும். புளிப்பு, காரம் என அனைத்தும் சேர்ந்த இந்த கிரேவி குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த வித்தியாசமான தக்காளி தயிர் கிரேவி எப்படி செய்வது என்று பதிவை தொடர்ந்து தெரிந்து கொள்ளலாம்.

thakkali

தேவையான பொருட்கள்: வெங்காயம் – 2, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 3, மிளகாய் தூள் -1 டீஸ்பூன், தனியாத் தூள் -1/2 டீஸ்பூன், கரம் மசாலா – 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன், உப்பு -1/2 டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், புளிக்காத தயிர் – 1 கப், கிராம்பு – 4, பட்டை – 1 துண்டு, சீரகம் – 1/2 டீஸ்பூன், எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்.

இந்த கிரேவி செய்ய முதலில் இரண்டு தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கி ஒரு பவுலில் வைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் மூன்று பச்சை மிளகாயை முழுதாக சேர்த்து அரை கப் தயிரையும் இதில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள், இத்துடன் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் உப்பு இவை எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து ஐந்து நிமிடம் வரை அப்படியே ஊற வைத்து கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, சீரகம் சேர்த்து பொரிந்த பிறகு வெங்காயத்தை நீளமாக நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் வதங்கிய பிறகு ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை, சேர்த்து அதையும் லேசாக பச்சை வாடை போகும் வரை வதக்கி கொள்ளுங்கள்.

இப்போது பவுலில் வைத்திருக்கும் தக்காளி தயிரை சேர்த்த கலவையை இதில் சேர்த்து மீதம் இருக்கும் மிளகாய் தூளையும், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், தனியா தூள், உப்பு அனைத்தையும் சேர்த்த பிறகு மீதம் இருக்கும் அரை கப் தயிரையும் ஊற்றி, இரண்டு நிமிடம் தட்டு போட்டு மூடி வேக விடுங்கள். இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு எடுத்து பரிமாறு வேண்டியது தான்.

இந்த கிரேவி சப்பாத்தி, பரோட்டா, நாண் போன்றவற்றுக்கு நல்ல காம்பினேஷன். இந்த வித்தியாமான தயிர் தக்காளி கிரேவியை நீங்களும் உங்க வீட்டில் செய்து பாருங்கள்.

The post சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷா இந்த தக்காளி தயிர் கிரேவிய செஞ்சி பாருங்க, அப்புறம் எப்ப சப்பாத்தி செஞ்சாலும் இது தான் சைடிஷா இருக்கும். அசைவம் கூட வேண்டாம் என்று சொல்லிடுவீங்க. appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.