தக்காளி சட்னியை இப்படி கூட செய்யலாமா? இதுபோல ஒரு சுவையில் தக்காளி சட்னியை இதுவரைக்கும் நீங்க சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க.

விதவிதமா எத்தனையோ வகைகளில் தக்காளி சட்னியை அரைக்கலாம். இட்லி, தோசை, சப்பாத்தி ஆப்பம் இவைகளுக்கு தொட்டு சாப்பிட, பூரிக்கு கூட தொட்டு சாப்பிட சூப்பரான வித்தியாசமான ஒரு தக்காளி சட்னியை அரைப்பது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். வித்தியாசமான இந்த தக்காளி சட்னி குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

பச்சை மிளகாய்

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காரமான மிளகாய் பச்சை மிளகாய் 4 – போட்டு, முதலில் அதன் பச்சை வாடை போக வதக்க வேண்டும். (காரமில்லாத பச்சை மிளகாய் என்றால் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கூட வைத்துக் கொள்ளலாம்.) இப்படி வதக்கும்போது பச்சை மிளகாய் வெடிக்கும் பச்சை மிளகாய் சிறிய கீறல் போட்டுக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் ஒரு மூடி போட்டு வதக்குங்கள். ஜாக்கிரதை.

பச்சை மிளகாய் நன்றாக வதங்கி வந்த பிறகு, தோலுரித்த பூண்டு பல் 3 அல்லது 4, 1 கைப்பிடி அளவு கொத்தமல்லி தழையை போட்டு ஒரு நிமிடம் போல வதக்கி இதை தனியாக ஒரு தட்டில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதே கடாயில் 7 லிருந்து 8 மீடியம் சைஸில் இருக்கும் பழுத்த புளிப்பான தக்காளி பழங்களை வெட்டி போட்டு, தேவையான அளவு உப்பு, போட்டு வதங்க வேண்டும்.

2-Tomato

தக்காளியின் பச்சை வாடை முழுவதும் நீங்கும் அளவுக்கு மூடி போட்டு கூட வேக வைத்துக் கொள்ளுங்கள். தக்காளியின் பச்சை வாடை போக வதங்கிய பின்பு அடுப்பை அணைத்துவிட்டு இதை நன்றாக ஆற வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், பூண்டு, கொத்தமல்லி தழை, இவைகளை போட்டு பிறகு வதக்கி வைத்திருக்கும் தக்காளி பழத்தையும் போட்டு 1 ஸ்பூன் வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து இதை அரைக்க வேண்டும். அரைத்த பின்பு உப்பு சரி பார்த்துக்கொண்டு தேவைப்பட்டால் போட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்கு வெல்லம் சர்க்கரை சேர்க்க விருப்பமில்லை என்றால் சேர்க்க வேண்டாம். அரைத்த விழுது இப்போது அப்படியே இருக்கட்டும்.

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, கருவேப்பிலை, கொஞ்சமாக பெருங்காயம், தாளித்துக் கொள்ள வேண்டும். இதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒரு கைப்பிடி அளவு போட்டு வதக்குங்கள். வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை மட்டும் வதக்கினால் போதும். இந்த தாளிப்பில் அரைத்து வைத்திருக்கும் சட்னியை ஊற்றி உடனடியாக அடுப்பை அணைத்து விடுங்கள்.

tomato-chutney2

அந்த சூட்டிலேயே ஒரு முறை கலந்து விட்டு விடுங்கள். அவ்வளவு தான் இந்த தக்காளி சட்னியில் அந்த வெங்காயம் ஆங்காங்கே கடிபட்டு சாப்பிடும் போது அவ்வளவு ருசியாக இருக்கும். ஒரு முறை முயற்சி செய்து, இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட்டு தான் பாருங்களேன். இதனுடைய ருசி என்னவென்று உங்களுக்கே தெரியும். குறிப்பு படிச்சிருந்தா முயற்சி செய்து பாருங்கள்.

The post தக்காளி சட்னியை இப்படி கூட செய்யலாமா? இதுபோல ஒரு சுவையில் தக்காளி சட்னியை இதுவரைக்கும் நீங்க சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க. appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.