40 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த உலகின் மிகப்பெரிய எரிமலை; ஹவாய் தீவில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

உலகில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் மிகப்பெரிய எரிமலை மௌனா லோவா(Mauna Loa), கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஹவாய் தீவில் வெடித்திருக்கிறது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்(USGS) தெரிவித்த தகவலின்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11:30 மணியளவில் எரிமலை வெடிக்கத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த கால நிகழ்வுகளின் அடிப்படையில் மௌனா லோவா எரிமலை வெடிப்பின் ஆரம்ப நிலை மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.

தீவின் மக்கள்தொகை 1980-ம் ஆண்டு முதல் இருமடங்கு அதிகரித்திருப்பதையடுத்து, குடியிருப்பாளர்கள் "லாவா பேரழிவை" எதிர்கொள்ளக்கூடும் என ஹவாயின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் எச்சரித்திருக்கிறது.

பொதுமக்களுக்கு எச்சரிக்கைவிடப்பட்டிருந்தாலும், இதுவரை எந்த வெளியேற்ற உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

``இந்த எரிமலை ஓட்டங்கள் அரிதாகவே உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன, ஆனால் அவை உள்கட்டமைப்புக்கு மிகவும் அழிவுகரமானவை." - பிரிட்டிஷ் எரிமலை புவி இயற்பியலாளர் டாக்டர் ஜெசிகா ஜான்சன்

ஹவாய் தீவில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் ஆறு எரிமலைகளில் மௌனா லோவா எரிமலையும் ஒன்று.

ஹவாய் தீவின் மொத்த பரப்பளவில் சுமார் 2,000 சதுர மைல்கள் (5,179 சதுர கி.மீ) பரப்பளவில் இந்த எரிமலை பரவியுள்ளது. அதோடு, இந்த எரிமலை கடல் மட்டத்திலிருந்து 13,679 அடி (4,169 மீ) உயரத்திலிருக்கிறது.

1984-ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் இந்த எரிமலை மீண்டும் வெடித்திருக்கிறது.

மௌனா லோவா எரிமலை, 1983-லிருந்து இதுவரை 33 முறை வெடித்திருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.