மனித மூளைக்குள் சிப் பொருத்தி சோதனை | கொல்லப்பட்ட 37,000 பறவைகள - உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

அமெரிக்காவின் லூசியானா, மிசிசிப்பி, ஜியார்ஜியா, மான்டகோமரி, அலபாமா, உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளியால் கடுமையான சேதம் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் 339 மில்லியன் மக்களுக்கு அடுத்த ஆண்டு அவசர உதவி தேவைப்படும் (emergency assistance) என ஐ.நா தெரிவித்திருக்கிறது.

ஜெனின் அகதிகள் முகாம்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

துருக்கி மற்றும் அஜர்பைஜானின் டீ (tea), யுனெஸ்கோவின் கலாசார பாரம்பர்ய அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது.

இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகள் 2022-ல் இதுவரை 268 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளன.

பாகிஸ்தானுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மனித மூளைக்குள் சிப் ஒன்றை பொருத்தி சோதனை செய்ய இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார்.

பெரு நாட்டில், பறவை காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 37,000 பறவைகள் கொல்லப்பட்டன.

செனகல் நாடாளுமன்றத்தில் பெண் எம்.பியை அரசியல்வாதி ஒருவர் அறைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.