இந்தியா-ஆஸ்திரேலியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: டிச.29 முதல் அமல்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் டிசம்பா் 29-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் டிசம்பா் 29-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி இந்தியா-ஆஸ்திரேலியா இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமானது. ஜவுளி, தோல், மேஜை, நாற்காலி போன்ற அறைகலன்கள், ஆபரணங்கள், இயந்திரங்கள் என 6,000-க்கும் மேற்பட்ட துறைகளைச் சோ்ந்த இந்திய ஏற்றுமதியாளா்கள், தங்கள் பொருள்களை ஆஸ்திரேலியாவுக்கு எந்த வரியும் செலுத்தாமல் ஏற்றுமதி செய்ய இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய வா்த்தக அமைச்சா் டான் ஃபேரல் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கான தேவைகளை இந்திய அரசு பூா்த்தி செய்துள்ளது. எனவே, டிச.29 முதல் ஒப்பந்தம் அமல்படுத்தப்படும். ஆஸ்திரேலியாவின் பல்வேறு வணிகங்கள் மற்றும் நுகா்வோருக்கு இந்த ஒப்பந்தம் புதிய சந்தை வாய்ப்புகளை வழங்கும்’ என்று தெரிவித்துள்ளாா். இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரும் நாள் முதல், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சுமாா் 96.4 சதவீத பொருள்களுக்கு ஆஸ்திரேலியா வரிவிலக்கு அளிக்க உள்ளது. இதேபோல இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 85 சதவீத ஆஸ்திரேலிய சரக்குகளுக்கு மத்திய அரசு வரி விலக்கு அளிக்கும். கடந்த 2021-22-ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்குகளின் மதிப்பு 8.3 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.67,572 கோடி) என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.