தேசியக் கொடியை தலைகீழாக பறக்கவிட்ட நடிகை! குவியும் விமர்சனங்கள்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தேசியக் கொடியை தலைகீழாக பிடித்துக்கொண்டிருந்த பாலிவுட் நடிகையின் புகைப்படத்திற்கு விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தேசியக் கொடியை தலைகீழாக பிடித்துக்கொண்டிருந்த பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி புகைப்படத்திற்கு விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. உலகக் கோப்பை கால்ப்பந்து போட்டிகள் இந்தோனேஷிய தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை பலர் நேரில் கண்டு களித்து வருகின்றனர்.  படிக்க | மறைந்து 26 ஆண்டுகள்... இன்றும் டிரெண்டிங்கில் சில்க் ஸ்மிதா! இந்நிலையில், உலகக்கோப்பை போட்டியின்போது கடந்த மாதம் 29ஆம் தேதி, நடிகை நோரா ஃபதேஹியின் நடனம் இடம்பெற்றது. இதனை ரசிகர்கள் பலர் கண்டு களித்தனர்.  இதனைத் தொடர்ந்து ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க தேசியக் கொடியை அவர் தாங்கிப்பிடித்தார். அப்போது பச்சை, வெள்ளை, இளஞ்சிவப்பு நிறமுடைய தேசியக் கொடியை அவர் தலைகீழாக திருப்பிப் பிடித்தவாறு நடந்தார்.  இந்த விடியோ இணையத்தில் பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச அரங்கில் இருக்கும்போது தேசியக் கொடியை தாங்கிப்பிடிப்பதில் இத்தனை மெத்தனமா? என ரசிகர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.             View this post on Instagram                       A post shared by Arshin k madhu (@arshin_k_madhu)          

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.