வழக்கறிஞர்களிடமிருந்து டிப்ஸ் பெற ஆடையில் QR code! - டவாலியை சஸ்பெண்ட் செய்து நீதிமன்றம் நடவடிக்கை

வழக்கறிஞர்களிடமிருந்து `பேடிஎம் மூலம் அன்பளிப்பாகப் பணம் பெற்ற நீதிபதியின் டவாலியை பணியிடை நீக்கம் செய்து அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு.

டெல்லியில் உள்ள அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், கடந்த வியாழக்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நீதிமன்ற வழக்கறிஞர்களிடமிருந்து நீதிபதியின் டவாலி பேடிஎம் மூலம் பணம் வசூல் செய்தது கண்டறியப்பட்டுள்ளது.

டவாலி

அவர் தனது இடுப்பில் ஆடையுடன் சேர்த்து பேடிஎம்-க்கான QR code-ஐ வைத்திருந்திருக்கிறார். இதனைக் கவனித்த நீதிபதி அஜித் சிங், அவர் மீது கடிதம் மூலம் தலைமை நீதிபதிக்குப் புகார் அளித்துள்ளார். அதையடுத்து தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டல், இதனை அவசரம் மற்றும் முக்கிய வழக்காக கருதி, நீதிமன்ற டவாலியை விசாரித்துத் தகுந்த தண்டனை வழங்கியுள்ளார். அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ``29.11.2022 தேதியிட்ட நீதிபதி அஜித்தின் கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு விசாரித்ததில், நீதிமன்ற டவாலி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உதவியாளர் ஸ்ரீ ராஜேந்திர குமார் என்பவர், ஆடையோடு சேர்த்து பேடிஎம் QR code மூலம் பணத்தைப் பெற்றதற்காக உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.

சஸ்பெண்ட் காலத்தில் அவர் வேறு எந்த வேலை, வர்த்தகம் அல்லது தொழிலில் ஈடுபடவில்லை என்பதற்கான சான்றிதழை அளிக்க வேண்டும். அவ்வாறு சான்றிதழைச் சமர்ப்பித்தால் மட்டுமே அவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.