Chandramukhi 2: சந்திரமுகியாகிறாரா கங்கனா! படக்குழு சொல்வதென்ன?

2005-ல் வெளியாகி தியேட்டர்களில் மாதக்கணக்கில் ஓடி வசூலைக் குவித்த படம் சந்திரமுகி. ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, இயக்குநர் பி.வாசு என அதில் நடித்த பலருக்கும் தனிப்பாதை அமைத்துக் கொடுத்த படம் அது. பி.வாசுவை சந்திக்கும் பலரும் சந்திரமுகி 2 எப்போது வரும் என கேட்க ஆரம்பித்தனர். அதுக்கான பதில், இந்தாண்டு தான் கிடைத்திருக்கிறது. லைகா தயாரிப்பில் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ரவி மரியா, சுபிக்‌ஷா, ராதிகா நடிப்பில் சந்திரமுகி 2 ஆக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு சென்னை, மைசூர் ஆகிய இடங்களில் மாறி மாறி நடந்து வருகிறது.

பட பூஜையின் போது

சந்திரமுகி 2 படப்பிடிப்பு முழு வீச்சாக நடந்து வந்தாலும் ஜோதிகா கதாபாத்திரம் போல், இதிலும் வலுவான ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. அந்த ரோலுக்கு த்ரிஷா, லட்சுமிமேனன் என பலரின் பெயர்கள் பரீசீலிக்கப்பட்டாலும் யாரும் முடிவாகாமலேயே படப்பிடிப்பை நடத்தி வந்தனர். இந்நிலையில் தான் அந்த ரோலில் கங்கனா ரணாவத் நடித்து வருவதாகத் தகவல்கள் உறுதியாகியுள்ளன. இந்த படத்திற்குள் கங்கனா கமிட் ஆகியிருப்பது குறித்து விசாரித்தோம்.

தயாரிப்பாளருடன்...

இந்தியில் வெளியான மணிகர்னிகாவில் கங்கனா ரணாவத் ராணி லட்சுமிபாய் ஆக அசத்தியிருந்தார். கம்பீரமான அவரது நடிப்பு பி.வாசுவை பெரிதும் கவர்ந்திருந்தது. அதனால் சந்திரமுகி 2வில் கங்கனாவை நடிக்க வைக்கலாம் என பேச்சு எழுந்தது. ஆனால் எல்லோருக்கும் அவர் ஹீரோயின் சென்ட்ரிக் என்றால் அவரிடம் கேட்டுவிடலாம். ஹீரோ படத்தில் அவர் நடிக்க முன்வருவாரா எனக் கேள்வி எழுந்தது. கடைசியில் கங்கனாவிடம் நாம் கதையை சொல்லிப் பார்க்கலாம். முயற்சிப்போம்.. என்ற நிலையிலேயே அணுகியிருக்கிறார்கள்.

இதற்காக இயக்குநர் மும்பை சென்று கங்கனாவிடம் கதையை சொல்லியிருக்கிறார். பி.வாசுவிடம் உங்களது சந்திரமுகி படத்தை பார்த்திருக்கேன். ரொம்ப பிடித்த படம் அது எனச் சொல்லி ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். இரண்டாம் பாகத்தின் கதையை சொல்லி முடிப்பதற்குள் கங்கனா நடிக்க சம்மதித்துவிட்டார் என்கிறார்கள். முதல் பாகத்தில் உள்ள ஜோதிகா கேரக்டரை விட பல மடங்கு பேசப்படும் கேரக்டர் இது எனச் சொல்கின்றனர் படக்குழுவினர். இப்போது மைசூரில் நடந்த ஷெட்யூலில் கங்கனாவின் போர்ஷனை படமாக்கி வருகிறார்கள். என்கிறார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.