அப்போ ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை, இப்போ ஆளுநருக்கு மசோதாவில் சந்தேகம் - ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவில் குட்டிக்கரணம் போடும் தி,மு.க அரசு

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவில் சில சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டு ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவில் ஆளுநருக்கு சில சந்தேகங்கள் உள்ளதாகவும் அவற்றை தெளிவுபடுத்திக் கொண்டு ஒப்புதல் அளிப்பதாகவும் ஆளுநர் தெரிவித்ததாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

நேற்று ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என் ரவியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தலைமை செயலக செயலாளர் பன்னீத்ர ரெட்டி ஆகியோர் சந்திப்பு ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு விரைவில் ஒப்புதல் அளிக்குமாறு வலியுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி ஆன்லைன் சூதாட்ட வட்டத்தில் கொள்ளை கும்பல் புரோகிராம் செட் செய்து வைத்து பணத்தை கொள்ளை அடிப்பதாக குற்றம் சுமத்தினார்.

ஏற்கனவே ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என பழி சுமத்தி வந்த தி.மு.க தற்போது ஆளுநர் அவர்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும் அவற்றை தெளிவுபடுத்திக் கொண்டு ஒப்புதல் அளிப்பதாகவும் மாற்றி மாற்றி பேசியது குறிப்பிடத்தக்கது.


Source - Polimer News

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.