சிறுத்தைகளின் லீலைகளை மேடையில் அம்பலப்படுத்திய வி.சி.க மகளிர் அணி - கோபத்தில் மைக்கை பிடுங்க சொன்ன திருமாவளவன்

விடுதலைக்கு சிறுத்தைகள் கட்சிக்குள்ளும் சனாதனம் இருக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சியில் பெண்களை ஆண் நிர்வாகிகள் கடுமையாக திட்டி இருப்பதை ரெக்கார்ட் செய்து வைத்திருக்கிறேன் என அக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் நற்சோனை பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் திருமாவளவனும் பங்கேற்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பேசிக்க மகளிர் அணி செயலாளர் நற்சோனை கட்சியின் நிர்வாகிகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த திருமாவளவன் நற்சோனை பேசிக்கொண்டிருந்த மைகேல் ஆப் செய்ய உத்தரவிட்டார், எதனை எடுத்து வி.சி.க நிர்வாகி ஒருவர் மைக்கை துண்டிக்க வேளையில் அப்போது உக்கிரமான நற்சோனை, வி.சி.க ஆண் நிர்வாகிகள் பெண்களை எவ்வளவு கேவலமாக திட்ட முடியுமோ அவ்வளவு கேவலமாக திட்டி இருக்கானுங்க. நான் டேப் ரெக்கார்டு செய்து வைத்திருக்கிறேன். அதை எல்லாம் நான் காட்டுகிறேன் ஆண் சமூகம் இன்னும் திருந்தவில்லை ஆண் சமூகம் திருந்த வேண்டும். நாங்கள் சனாதனத்தை எதிர்க்கிறோம் இந்த கட்சிக்குள் சனாதனம் இருக்கிறது. டாப் டூ பாட்டம் கட்சிக்குள் சமாதானம் இருக்கிறது என நற்சோனை பேசிக் கொண்டிருக்கும் பொழுது மைக் அமர்த்தப்பட்டது.

அப்பொழுது கீழே அமர்ந்த பெண்கள் நற்சோனைக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர் எதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் லீலைகள் அம்பலமாவது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Source - One India Tamil

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.