திருவண்ணாமலையில் ஆயுஷ் ஹோமம்: ஆயுள் ஆரோக்கியம் அருளும் பிரமாண்ட வழிபாடு; நீங்களும் சங்கல்பியுங்கள்!

திருவண்ணாமலையில், ஈசான லிங்கம் எதிரே உள்ள ஸ்ரீஅம்மணி அம்மாள் சித்தர் பீடத்தில், இந்த ஆயுஷ் ஹோமத்தை 2022 கார்த்திகை பௌர்ணமி நாளில் (டிசம்பர்-7) காலை 9 தொடங்கி மதியம் 12 வரை நடத்த உள்ளோம்.
திருவண்ணாமலை தீபம்

ஆயுர் தேவதையை வேண்டி நடத்தப்படும் ஹோமம் ஆயுஷ் ஹோமம் எனப்படும். இந்த ஹோமத்தால் ஒருவருக்கு நீண்ட ஆயுள், நீடித்த ஆரோக்கியம், மன-உடல் வேதனையிலிருந்து நிவாரணம் கிடைக்கும். உடலுக்கும் மனதுக்கும் தேவையான ஆற்றல் காரகனாகிய ஆயுர் தேவதை, நமது வாழ்வை வளமாக்கும் அதிதேவதை என்கின்றன நூல்கள்.

பலன் மிக்க இந்த ஹோமத்தால் சிரஞ்சீவித்தன்மை கொண்ட மகாபுருஷர்கள் நம்மை வாழ்த்தி நீண்ட ஆயுள் வரம் அருளுவார்கள் எனப்படுகிறது. மார்கண்டேயர், அஸ்வத்தாமர், மகாபலி, வியாசர், அனுமன், விபீஷணர், கிருபாச்சார்யர், பரசுராமர் ஆகியோர் அந்த சப்த சிரஞ்சீவிகள் என்கிறது ஆன்மிகம்.

எதிரிகளால் ஏற்படும் பிரச்னைகள் நீங்கும். வம்பு, வழக்குகள், அவமானம் போன்றவற்றுக்கு தீர்வு கிடைக்கும். உங்களின் உயிர்க்கு ஏற்படவிருக்கின்ற கண்டங்கள், ஆபத்துகள் நீங்கி ஆயுள் அதிகரிக்கும். நீங்கள் தொடங்கும் அனைத்து முயற்சிகளில் வெற்றிகள் உண்டாகும்.

ஹோம பூஜை

இந்த ஹோமம் பிரம்ம முகூர்த்தத்தில் செய்வது நல்லது என்றாலும், பௌர்ணமி நாளில் எல்லா நேரமும் செய்யலாம் என்கிறார்கள் பெரியோர்கள். பொதுவாக நீண்ட காலம் வாழ வேண்டி ஒவ்வொரு ஆண்டு முடியும் போதும் இந்த ஆயுஷ் ஹோமத்தை செய்ய வேண்டும் என வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கியமாக ஒரு வயது, ஐம்பது வயது, அறுபது வயது, எண்பது வயது, தொன்னூறு வயது முடிந்தவர்கள் இதைக் கட்டாயம் செய்ய வேண்டும் என்பார்கள். இந்த ஆயுஷ் ஹோமத்தைத் தொடர்ந்து செய்து வர ஆயுள் கூடி அவர்கள் பூரணாபிஷேகம் (100 வயது) வரை வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. சார்ஜ் குறையும்போது எப்படி மீண்டும் சார்ஜ் ஏற்றுகிறோமோ அதுபோல ஒரு வயது முடிந்து விட்டால், குறைந்துவிட்ட ஒரு ஆண்டு ஆயுளை மீட்டுத்தர அந்த ஆயுள் தேவதையை வேண்டி செய்யப்படுவதே ஆயுஷ் ஹோமம். இதை நியம நிஷ்டையோடு செய்ய வேண்டும் என்கிறார்கள் பெரியோர்கள்.

முன்பதிவு மற்றும் சங்கல்ப விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

பெயர் வைத்தல், காது குத்துதல், திருமணம் செய்தல் போன்று இந்த ஆயுஷ் ஹோமமும் கட்டாயம் செய்ய வேண்டிய வழிபாட்டு சடங்கு என்கின்றன புனித நூல்கள். ஆயுளை நீட்டிக்க செய்பவன் சர்வேஸ்வரன் மட்டுமே. மிருத்யுஞ்சயன் அதாவது மரண பயத்தை ஒழிப்பவன் சிவன் மட்டுமே. காலபைரவனான சிவபெருமான் யமனை தண்டித்தவன். எனவே அந்த சர்வேசன் சிறப்பாக விண்ணும் மண்ணும் அளக்க எழுந்து நின்ற திருவண்ணாமலையில், ஈசான லிங்கம் எதிரே உள்ள ஸ்ரீஅம்மணி அம்மாள் சித்தர் பீடத்தில், இந்த ஆயுஷ் ஹோமத்தை 2022 கார்த்திகை பௌர்ணமி நாளில் (டிசம்பர்-7) காலை 9 தொடங்கி மதியம் 12 வரை நடத்த உள்ளோம். கார்த்திகை மகாதீபத்துக்கு மறுநாள் பௌர்ணமி அன்று நடைபெற உள்ளது.

அம்மணி அம்மாள்

திருவண்ணாமலை வடக்கு கோபுரத்தைக் கட்டிய பெண் சித்தராம் ஸ்ரீஅம்மணி அம்மன் அருளால் மரணத்தை வென்றவர்கள் அநேகம் பேர். இங்கு கார்த்திகை பௌர்ணமி நாளில் நடைபெறும் ஆயுஷ் ஹோமத்தில் கலந்து கொண்டால் வேண்டியது யாவும் நிறைவேறும் என்பது நிச்சயம். சென்னை சமுத்திரம் என்னும் ஊர், தென் பெண்ணை நீர் வாழும் சாத்தனூர் அருகே அமைந்த செங்கத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரில் 17-ம் நூற்றாண்டில் ஏகபோக சொத்துடன் ஆயி அம்மாள் -கோபால்சாமி என்ற தம்பதியினர் குழந்தை பாக்கியம் இன்றி வாழ்ந்த நிலையில் அவர்கள் ஒரு பாறையின் மீது கண்டெடுத்த குழந்தையே இந்த அம்மணி அம்மாள். இவர், ஈசனின் விருப்பத்தால் துறவு வாழ்க்கையை மேற்கொண்டவர்.

முன்பதிவு மற்றும் சங்கல்ப விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

பல சித்து வேலைகளின் வழியே இவர் பிரமாண்டமான திருவண்ணாமலை வடக்கு கோபுரத்தைக் காட்டினார். அது இன்றும் அம்மணி அம்மா கோபுரம் என்றே அழைக்கப்படுகிறது. அம்மணி அம்மாள் பெண் சித்தர்களில் முதன்மையானவர் என்று போற்றப்படுபவர் அம்மணி அம்மாள். பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற கட்டுப்பெட்டியான அந்த காலத்திலேயே காற்றைப்போல திரிந்து பல அற்புதங்கள் செய்த மகா யோகினி இவர். இவரை வணங்கினால் திருமணப்பேறு, குழந்தைப் பேறு, காரிய ஸித்தி உண்டாகும் என்பது நம்பிக்கை. எண்ணியவற்றை எளிதாக நிறைவேற்றித் தரும் இந்த பெண் சித்தரின் சந்நிதியில் ஆயுள் விருத்தி அருளும் ஆயுஷ் ஹோமம் நடக்கவிருப்பது வெகு பொருத்தமானது என்கிறார்கள் பக்தர்கள். திருவண்ணாமலை, ஈசான லிங்கம் எதிரே உள்ள ஸ்ரீஅம்மணி அம்மாள் சித்தர் பீடத்தில் ஆயுஷ் ஹோமம் நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் இந்த ஹோமத்தில் சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும் என அழைக்கிறோம்.

அம்மணி அம்மாள்

வாசகர்களின் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்ப விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.