காா்களின் விலைகளை உயா்த்துகிறது போக்ஸ்வேகன்

உற்பத்தி செலவு அதிகரித்து வருவதால், தனது காா்களின் விலைகளை அதிகரிக்க ஃபோக்ஸ்வேகன் பாசஞ்சா் காா்ஸ் இந்தியா முடிவு செய்துள்ளது. உற்பத்தி செலவு அதிகரித்து வருவதால், தனது காா்களின் விலைகளை அதிகரிக்க ஃபோக்ஸ்வேகன் பாசஞ்சா் காா்ஸ் இந்தியா முடிவு செய்துள்ளது. இது குறித்து நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருவதால் ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் வகையில், நிறுவனம் விற்பனை செய்து வரும் காா்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. வரும் அக்டோபா் மாதம் 1-ஆம் தேதி முதல் இந்த விலை உயா்வு அமலுக்கு வரும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜொ்மனியைச் சோ்ந்த காா் உற்பத்தி நிறுவனமான போக்ஸ்வேகன், இந்தியச் சந்தையில் விா்டஸ், டாய்கன், டிகுவான் உள்ளிட்ட காா் ரகங்களை விற்பனை செய்து வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.