உடற்பயிற்சியின் போது ஏற்பட்ட மாரடைப்பு... பிரபல காமெடி நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா காலமானார்!

ஹிந்தி திரைத்துறையில் பிரபல காமெடியனாக வலம் வந்த நராஜு ஸ்ரீவஸ்தவா, தன்னுடைய 58 வயதில் செப்டம்பர் 21, புதன்கிழமையன்று இறந்துள்ளார். ஆகஸ்ட் 10-ம் தேதியன்று ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவருக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரை அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ் மருத்துவமனை) அனுமதித்துள்ளனர். அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அன்றிலிருந்து அவரது நினைவு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அவரை மருத்துவர்கள் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

Raju Srivastav

``அரை மணிநேரத்திற்கு முன்பு என்னுடைய குடும்பத்தினரிடமிருந்து அழைப்பு வந்தது. ராஜு ஸ்ரீவஸ்தவா இதற்கு மேல் நம்முடன் இல்லை எனக் கூறினர். இது உண்மையில் துரதிர்ஷ்டமான செய்தி. மருத்துவமனையில் 40 நாள்களாக அவன் போராடினான் என ராஜு ஸ்ரீவஸ்தவாவின் சகோதரர் திபூ ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.

ராஜு ஸ்ரீவஸ்தவா, 1980-ம் ஆண்டு முதல் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தைத் தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் மறைவைத் தொடர்ந்து பலரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.