சனி பகவான் யாரையெல்லாம் பாதிப்பிற்கு உள்ளாக்குவதில்லை...!!

காகத்திற்கு அன்னம் அளிப்பவர்கள், பித்ரு கடன் சரிவர செய்பவர்களை சனி கருணையுடன் பார்ப்பார். கருப்பு காராம்பசுவின் பால், நெய், தயிர் இவற்றுடன் பூஜிப்பவர்களை சனி மிகவும் விரும்புவார். அவர்களை சோதித்தாலும் பாதிப்பதில்லை.


ஆச்சார சீலர்கள், அனுதினம் சிவபூஜை செய்பவர்களை சனி நேசிப்பார். சுத்தமும் சுகாதாரமும் நிறைந்தவர்கள், மற்றவரை அல்லல்படுத்தி ஆனந்தப்படாதவர்களை பீடிக்கும். காலத்திலும் பாவமன்னிப்பு அளித்து பாதுகாப்பார்.

சத்தியம் தவறாதவர்கள் மனதில் நித்திய வாசம் செய்வாள் மஹாலக்ஷ்மி என்பார்கள். அந்த திருமகள் இருக்கும் இடத்தை திரும்பிக்கூட பார்ப்பதில்லை சனி. அதாவது சத்தியம் தவறாதவரை. ஸ்திரவாரம் எனும் சனிக்கிழமை விரதமிருப்பதும், சுதர்சன எந்திர வழிபாடு செய்வதும் சனிக்கு பிடித்தமான ஒன்று.

எள்ளன்னம் வைத்து என்னாளும் துதிப்பவரை சனி நெருங்குவதே இல்லை. வலம்புரி சங்குள்ள இல்லம், சாலகிராமத்தை பூஜிப்பவர்களை சனி படுத்துவதில்லை. ருத்ராட்சம் அணிந்தவர்களை ருத்திர பிரியரான சனி பீடிப்பதில்லை.

நமச்சிவய எனும் நாமம் உச்சரிப்பவர்களை சனி பாதிப்பதில்லை. பாவவினைகளுக்கு பரிகார மருந்து பிரதோஷ வழிபாடு. அதை தடையின்றி செய்பவர்களை சனி தண்டிப்பதில்லை.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.