காமன்வெல்த் மல்யுத்தம்: ஒரே நாளில் மூன்று தங்கங்களைக் குவித்த இந்தியா

 

காமன்வெல்த் போட்டிகளில் ஒரே நாளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது இந்திய அணி.

இங்கிலாந்தின் பிர்மிங்கமில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று மல்யுத்த விளையாட்டில் நடைபெற்ற ஆறு போட்டிகளிலும் இந்திய அணி ஆறு பதக்கங்களை வென்று அசத்தியது. இதனால் இந்திய அணியின் பதக்க எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது.

ஆடவர் 65 கிலோ எடைப்பிரிவில் பஜ்ரங் புனியாவும் மகளிர் 62 கிலோ எடைப்பிரிவில் சாக்‌ஷி மாலிக்கும் ஆடவர் 86 கிலோ எடைப்பிரிவில் தீபக் புனியாவும் தங்கப் பதக்கங்களை வென்றார்கள். மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் அன்ஷு மாலிக் வெள்ளியும் மகளிர் 68 கிலோ எடைப்பிரிவில் திவ்யா காக்ரன் வெண்கலமும் ஆடவர் 125 கிலோ எடைப்பிரிவில் மோஹித் கிரேவால் வெண்கலமும் வென்றார்கள். இன்று மேலும் ஆறு மல்யுத்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன. 

பஜ்ரங் புனியா

 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.