கர்நாடக முதல்வருக்கு கரோனா தொற்று உறுதி

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது தில்லி பயணம் ரத்தாகியுள்ளது. 

நாட்டில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பிரபலங்கள் பலரும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். 

இந்நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், லேசான அறிகுறிகளுடன் எனக்கு தொற்று உறுதியாகியுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பு கொண்டவர்கள், தனிமைப்படுத்தி பரிசோதித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். எனது தில்லி பயணமும் ரத்து செய்யப்படுகிறது என்று பதிவிட்டுள்ளார். 

இதையும் படிக்க |  தமிழகத்தில் இன்று முதல் பிங்க் நிற பேருந்துகள்! மகளிர் இலவசப் பயணத்திற்காக...!

 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.