நாட்டில் புதிதாக 19,406 பேருக்கு தொற்று; மேலும் 49 பேர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 19,406 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,34,793 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.31 சதவீதமாக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 49 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5,26,649 ஆக உயர்ந்துள்ளது. இறந்தோரின் விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது.

கரோனாவில் இருந்து மேலும் 19,928 போ் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4,34,65,552-ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.50 சதவீதமாக உள்ளது. 

நாடு முழுவதும் இதுவரை 2,05,92,20,794 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 32,73,551 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இதுகுறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

இதையும் படிக்க |   கர்நாடக முதல்வருக்கு கரோனா தொற்று உறுதி

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.