மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது

 

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

கன்னட திரையுலகின் முடி சூடா மன்னனாக திகழ்ந்த ராஜ்குமாரின் இளைய மகன் புனித் ராஜ்குமார், கடந்த ஆண்டு அக்டோபரில் மாரடைப்பால் காலமானார். இளம் வயதில் அவரது மறைவு இந்திய அளவில் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அப்பு என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும்  புனித்,  பாடகர் தயாரிப்பாளர் என பன்முகங்களைக் கொண்டிருந்தார். மேலும் இவரது அசாத்தியமான நடனத் திறமையும் இந்திய அளவில் பேசப்படும் ஒன்றாக இருந்துவந்தது. 

இதையும் படிக்க |   அதர்வாவின் குருதி ஆட்டம் - படம் எப்படி இருக்கிறது?

இந்த நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருதை அறிவித்துள்ளார். இந்த விருதானது வருகிற நவம்பர் 1 ஆம் தேதி வழங்கப்படும். கர்நாடக முதல்வரின் அறிவிப்புக்கு அம்மாநில மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 


 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.