ம.பி: இருசக்கர வாகன சாவிக்காக ஏற்பட்ட சண்டை - மகனின் கையை கோடாரியால் வெட்டி கொன்ற தந்தை
மத்தியப் பிரதேசத்தில் உள்ள டாமோவில் இருசக்கர வாகன சாவிக்காக ஏற்பட்ட சண்டை, ஒரு 21 வயது இளைஞரின் உயிரை காவு வாங்கியிருக்கிறது.
மோதி பட்டேல் (51) என்பவரின் இளைய மகன் சந்தோஷ் படேல் (2). மோதி பட்டேலுக்கும் அவருடைய மூத்த மகன் ராம் கிசானும் (24), வெளியே செல்வதற்காக சந்தோஷ் படேலிடம் இருசக்கர வாகனத்தின் சாவியைக் கேட்டுள்ளனர். சந்தோஷ் சாவியைக் கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், மோதியும் ராம் கிசானும் சேர்ந்து சந்தோஷை கடுமையாக தாக்கியுள்ளனர். கடும் கோபமடைந்த மோதி, தனது மகனின் இடது கையை கோடாரியால் வெட்டினார். இதனால் அவருடைய கை துண்டானது. என்றாலும் தனது செயலால் பதறிப்போன மோதி துண்டான கை, கோடாரியுடன் அருகிலிருந்த காவல்நிலையத்துக்கு சென்று சரணடைந்தார்.
இந்த சம்பவத்தைக் கேட்டு அதிர்ந்து போன அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு புகார் தெரிவித்தனர். மேலும் ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த சந்தோஷை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 21 வயது இளைஞன் சந்தோஷ் ரத்த இழப்பால் உயிரிழந்ததாக போலீஸார் சார்பில் கூறப்படுகிறது. மேலும் மோதி மற்றும் அவருடைய சகோதரர் ராம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.