எந்த சோதனை வந்தாலும் அதை சமாளிக்கிற சக்தி உங்களுக்கு தானா வந்துடும்…!!!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்திறன் கொண்டவர். மகாஅவதார் பாபாஜியின் தீவிர பக்தர். அடிக்கடி இமயமலைக்குப் போய் வருவார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அங்கு அப்படி என்ன தான் உள்ளது என்ற கேள்வி நம் அனைவருக்குமே எழும். அதை அவர் வாயாலேயே என்ன சொல்கிறார் என்று பார்ப்போமே…

இமயமலையில் அப்படி என்ன இருக்குன்னு சொன்னா அந்த மலையில் கங்கை பாய்ந்து வரும் இடங்கள் எல்லாம் இயற்கையாகவே அந்த மலை அந்த பச்சை அந்த மரங்கள் செடிகள், அந்த நதியோட நாதம், அதுக்கப்புறம் இயற்கையாகவே அந்த மலையில் அமைந்திருக்கிற குகைகள், அங்கப் பார்த்தாலே அது ஒரு சொர்க்கமா இருக்கும்.

Rajnikanth in rishikesh

அந்த குகைகள சொன்னா அது வந்து வெளியில ரொம்ப ஹீட்டா இருந்தா உள்ள ஏர்கன்டிஷன் மாதிரி இருக்கும். வெளிய வந்து ரொம்ப கூலா இருந்தா உள்ள ரொம்ப சூடா இருக்கும். அங்கே வந்துட்டு சில மூலிகைகள் கிடைக்கும்.

அது வேற எதிலேயும் கிடைக்காது. அந்த மூலிகையை வந்துட்டு ஒரு பீஸ் சாப்பிட்டா ஒரு வாரத்துக்கு 10 நாளைக்கு எனர்ஜி உடம்புக்கு என்ன தேவையோ விட்டமின்ஸ் அதெல்லாம் அது கொடுக்கும். சில செடிகள் இருக்கும். அதை வந்து தோட்டத்துல வச்சிட்டா ஒரு ஈ, எறும்பு, கொசு, தேள் எதுவுமே உள்ள வராது.

அதனாலதான் பெரிய பெரிய மகான்கள் அப்பல்லருந்து வியாசர், வசிஷ்டர், விஸ்வாமித்திரர் அங்கே வந்து தவம் செய்தாங்க. அதனால தான் அந்த வைப்ரேஷன் எப்பவுமே இருந்துக்கிட்டே இருக்கும்.

rajni in himalaya

அந்த கங்கை நதி ஏன் அதை வந்து புனிதம்னு சொல்றாங்கன்னா முதல்ல வந்து அந்த மூலிகைகள் எல்லாம் சேர்ந்து அந்த நதியில வந்து படுறதனால. இன்னொன்னு தவசித்தர்கள், யோகிகள் அவங்கள்லாம் அங்க குளிக்கிறதனால கங்கை வந்து அவ்வளவு பவித்ரம்னு சொல்றோம். அதனால அந்த இமயமலை எல்லாரையும் ஈர்க்குது.

நம்ம உடம்பு, அறிவு, மனசு இந்த மூணையும் நாம நல்லா பார்த்துக்கணும். டீன் ஏஜ்ல உடம்பப் பத்தி அவ்வளவா கவலை இருக்காது. ஆனா அதை நல்லா பார்த்துக்கணும்னா அதுக்கு சரியான ஆகாரம், உடற்பயிற்சி, தியானம்னு சில விஷயங்களை முறையா கடைபிடிக்கணும். மெடிட்டேஷன்ல இருந்து வந்தது தான் மெடிசின்.

அறிவுங்கறது புத்தி. அதுக்கு ஆகாரம் என்னன்னா நல்ல விஷயங்களைக் கேட்குறது, நல்ல புத்தகங்கள் படிக்குறது, நல்ல உலதேசங்கள், தான தர்மம் பண்றது, நியாயமா நடக்குறது, புண்ணியங்கள் செய்றது இதுதான். அடுத்து மனசு. இது வந்து என்ன செய்யும்னா இது வந்து அறிவோட பை புராடக்ட். மூலாதாரத்தில் பழைய கர்மாக்களின் பதிவுகள் இருக்கும்.

அதோட செல்வாக்கு எல்லாம் மனசுல இருக்கும். அதனால இந்த மனசு, அறிவு, உடம்பு எல்லாத்தையும் செயல்படுத்துறதுக்கு ஒரு சக்தி தேவை. அது தான் உயிர், ஆத்மா, ஜீவன்னு சொல்றாங்க. ஜீவாத்மான்னு சொல்லலாம். பரமாத்மாவோட சின்ன பொறி தான் இந்த ஜீவாத்மா. அது வந்து புருவமத்தியில் ஒரு சின்ன சிப் இருக்கு. இதுதான் அதோட கனெக்டாகுது. மூலாதாரத்துல இருந்து வரக்கூடிய சக்கரங்களை எல்லாம் ஆக்டிவேட் பண்ணனும். அதை முறையாகப் பண்ணும்போது பல வருஷங்கள், பல ஜென்மங்கள் ஆகும்.

மூலாதாரத்தில் இருந்து வரக்கூடிய எனர்ஜி வந்து புருவமத்தியில் ஓபன் ஆகும்போது தான் சக்கரங்கள் எல்லாம் வேலை செய்யும். இதை உணர்ந்தால் காம, குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் எல்லாமே தெரியும்.

rajni in meditation

அதெல்லாம் கம்ப்ளீட்டா போயிடும். உங்களுக்குத் தெரியாம எப்பவுமே மகிழ்ச்சியா இருப்பீங்க. எப்பவுமே ஒரு நிம்மதி இருக்கும். ஒரு சந்தோஷம் இருக்கும். சுயநலமா இருக்குறதப் பத்தி நினைக்க மாட்டீங்க. உங்களுக்குன்னு ஒரு இம்யுனிட்டி பவர் வரும். நீங்க உயிரோட இருக்கும்போதே ஜீவன் முக்தி அடைஞ்சிடுவீங்க.

ஒங்களோட சக்தி முழுவதும் யுனிவர்சல் பவர் கூட சேரும்போது இயற்கையோட இயற்கையா சேர்ந்து நீங்களும் ஐக்கியமாயிடுவீங்க. இந்த பயிற்சியால என்ன நன்மைகள்னு சொன்னா உங்களுக்கும் எல்லாரு மாதிரியும் பிரச்சனைகள் கஷ்டங்கள் எல்லாம் வரும். ஆனா அதை பேஸ் பண்ற சக்தி தானா வரும். நீங்க வந்து ஒரு கஷ்டமோ துன்பமோ வருதுன்னு சொன்னா அதை சப்ஜெக்டிவ்வா பார்க்க மாட்டீங்க…அப்ஜெக்டிவ்வா பார்ப்பீங்க. அதை வெளியில இருந்து பார்த்து எப்படி அதை சால்வ் பண்றதுன்னு தான் பார்ப்பீங்க. அதை நெகடிவிட்டியா பார்க்க மாட்டீங்க. எப்பவும் பாசிட்டிவ் எண்ணங்களே கம்ப்ளீட்டா உங்களுக்குள்ள இருக்கும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.