7,100 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு சுகாதார அவசரநிலை அமெரிக்கா அறிவிப்பு: ஓரினச் சேர்க்கையால் வேகமாக பரவல்

வாஷிங்டன்: கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முடியாத நிலையில், தற்போது குரங்கம்மை நோய் உலகளவில் பரவி வருகிறது.  கட்டியணைத்தல், முத்தமிடுதல், ஆடைகள், டவல் மற்றும் படுக்கையை பகிர்ந்து கொள்வதன் மூலம்இந்த நோய் பரவும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த, உலக சுகாதார நெருக்கடி நிலையை உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில், அமெரிக்காவில் குரங்கம்மை நோய் அதிகளவில் வேகமாக பரவுகிறது. உலகளவில் மிகவும் அதிகப்பட்சமாக இந்த நாட்டில்  இதுவரையில் 7,100 பேர் இந்நோயால் பாதித்துள்ளனர். குறிப்பாக, ஓரினச் சேர்க்கையாளர்கள் அதிகளவில் பதித்துள்ளனர். இதனால், இந்த நோயை சுகாதார அவசர நிலையாக அமெரிக்கா நேற்று பிரகடனம் செய்தது.  ஸ்பெயினில் 4,600 பாதிப்புகுரங்கம்மை நோய் பரவத் தொடங்கிய இந்த 3 மாதங்களில், ஸ்பெயின் நாட்டில் மொத்தம் 4,577 பேருக்கு இந்நோய் உறுதியாகி உள்ளது. ஐரோப்பாவில் இந்த வைரஸ் உடலுறவு மூலமும் பரவுகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.