திருத்தணியில் வேளாண் வளர்ச்சி திட்ட ஆலோசனை கூட்டம்

திருத்தணி: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் திருத்தணி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது. திருத்தணி தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் கோமதி தலைமை வகித்தார். இதில், திருத்தணி வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) ரமேஷ் பேசுகையில், ‘இத்திட்டம் செயல்படுத்துவதற்கு அனைத்து துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பு அவசியம். இத்திட்டம் மூலம் 6 ஊராட்சிகளில், விவசாயிகளுக்கு தென்னங்கன்று முழு மானியத்தில் வழங்கப்படுகிறது. பச்சை பயிறு, உளுந்து, துவரை மற்றும் காராமணி போன்ற சிறுதானிய பயிர்களுக்கு மொத்தம், 37 ஏக்கர் பரப்பிற்கு மானியம் வழங்கப்படுகிறது. ஒரு ஊராட்சிக்கு அதிகபட்சமாக இரண்டரை ஏக்கருக்கு சிறுதானியங்கள் வழங்கப்படுகிறது. இதற்கு, 75 சதவீதம் மானியமாக ரூ.375 மற்றும் 5 கிலோ விதைககள் வழங்கப்படும். ஊராட்சிக்கு ஒரு கைதெளிப்பான் வீதம், 50 சதவீதம் மானியத்தில் ரூ.750 வழங்கப்படும். அதே போல், 5 பேட்டரி விசைத்தெளிப்பான் 50 சதவீதம் மானியத்தில் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்’என்றார். கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை, மின்சாரம், வருவாய், பொதுப்பணி மற்றும் வனத்துறை அலுவலர்கள் பங்கேற்று தங்களது துறையில் உள்ள திட்டங்கள் குறித்து எடுத்து கூறினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.