உடல் சோர்வை அகற்றி சுறுசுறுப்பைத்தரும் சீத்தாப்பழம் !!

சீத்தாப்பழத்தில் கனிசமான அளவு வைட்டமின் ‘சி’ உள்ளதால், சளியை தடுக்கும். சளிப்பிடித்தவர்கள், இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் சளி குணமாகும்.


சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி -காம்ப்ளக்ஸ், வைட்டமின் ஏ, நார்ச்சத்து, மெக்னீசியம், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து நிறைந்தது. புரதம், தாது பொருள்கள், இனிப்பு, கொழுப்புசத்து நிறைந்தது.

சீத்தாப்பழத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டு வர, கொலஸ்ட்ரால் சேராமல் காக்கும். சீத்தாப்பழத்துடன், குங்குமப்பூ சேர்த்துச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும்.

பழங்களில் தனிப்பட்ட சுவையும் மணமும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை என எல்லாமே மருத்துவகுணங்களை கொண்டதுதான். சீத்தாப்பழம் குளுக்கோஸ், சுக்ரோஸ் இரண்டுமே நிறைந்திருப்பதால் உடனடியாக உடலுக்கு ஆற்றல் தருகிறது.

சீத்தாப்பழத்துடன், சிறிது வெள்ளைப் பூண்டு வைத்து மையாக அரைத்து, தேமல் மீது பூசி வர, தேமல் மறையும். சீதாப் பழச்சாறுடன், திராட்சைப் பழச்சாறு கலந்து, பருகி வர, நரம்புகள் வலுப்படும்.

உஷ்ணத்தால் ஏற்படும் மந்தத்தைக் குணப்படுத்தும் தன்மை இப்பழத்திற்கு உண்டு. சீத்தாப்பழம் ரத்த விருத்தி செய்யும். சோகை நோயைக் குணப்படுத்தும். இப்பழத்தில் குளுக்கோஸ் கனிசமாக உள்ளதால் உடல் சோர்வை அகற்றி சுறுசுறுப்பை ஏற்படுத்தும்.

சீத்தாப்பழத்துடன், சிறிது இஞ்சி சாறு, கருப்பட்டி சேர்த்து தின்றால், பித்தம் மொத்தமாக விலகும். நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை சீதாப்பழத்திற்கு உண்டு.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.