மக்களைத் தேடிப் பயணிப்போம், மக்களின் குறைகளைத் தீர்ப்போம் ... திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை : மக்களைத் தேடிப் பயணிப்போம், மக்களின் குறைகளைத் தீர்ப்போம் என்று திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.ஓராண்டுகாலத்தை வெற்றிகரமாகக் கடந்துள்ள கழக ஆட்சி, ஓய்வின்றித் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருகிறது. இந்திய அளவில் முன்மாதிரியாகத் திகழ்கிறது நமது அரசு. அதன் பணிகளும், பயன்களும் தமிழ்நாட்டின் கடைக்கோடிவரை சென்று சேர்ந்திட வேண்டும் என்பதே உங்களில் ஒருவனான எனது நோக்கம். அதனை உறுதிசெய்வதற்காகத்தான் மாவட்டந்தோறும் பயணித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கியும், ஆய்வுப் பணிகளை மேற்கொண்டும் வருகிறேன்.திருப்பத்தூர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக ஜூன் 28 மாலை 4 மணிக்குச் சென்னையிலிருந்து புறப்பட்டேன். வழியெங்கும் மக்களின் வரவேற்பு உற்சாகத்தையும் ஊக்கத்தையும், ஓய்வின்றி உழைப்பதன் உன்னதத்தையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. இராணிப்பேட்டை மாவட்ட எல்லையிலும், வேலூர் மாவட்ட எல்லையிலும் எழுச்சிகரமான வரவேற்பினைக் கழகத்தினரும் பொதுமக்களும் அளித்தனர். அதன்பின்னர் திருப்பத்தூர் மாவட்ட எல்லைக்குச் சென்றபோது அங்கும் நல்ல வரவேற்பு! இரவு 9 மணிக்குத்தான் திருப்பத்தூர் மாவட்டத்தை அடைய முடிந்தது.மறுநாள் (ஜூன் 29) அன்று காலை திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரிலிருந்து புறப்பட்டு, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் திறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகச் சென்றபோது, வழியெங்கும் அலையலையாய் நிறைந்திருந்தன மனிதத் தலைகள். புன்னகை தவழும் முகத்துடன் கழகத்தினருடன் பொதுமக்களும் நிறைந்திருந்ததைப் பார்த்து, பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் என்னிடம் வாகனத்தில் சொன்னது, “நான் வாழ்நாளில் பார்த்திராத கூட்டம்” என்று, அந்த அளவு உணர்ச்சி அலை!பேனர்கள், கட்-அவுட்டுகள் போன்றவை கூடாது என்று உறுதியாகச் சொல்லிவிட்ட காரணத்தால், கழகத் தோழர்கள் தங்கள் குருதியுடன் கலந்த கொள்கை உணர்வைக் காட்டும் வகையில் கருப்பு-சிவப்புக் கொடியை அசைத்து வரவேற்பளித்தனர். கழகத்தின் சாதனைகளை விளக்கும் வகையிலான வரவேற்புகளையும் கண்டு மகிழ்ந்தேன். மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் விளைவித்துள்ள சமூகப் புரட்சியை வெளிப்படுத்தும் வகையிலான வரைபடத்துடன் பெண்கள் திரண்டு நின்று நன்றி கலந்த வரவேற்பளித்தனர். எந்நாளும் எந்நேரமும் நம் நெஞ்சில் வாழும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை நினைவூட்டும் வகையில் செம்மொழிப் பூங்கா போன்ற வடிவமைப்பை உருவாக்கி வரவேற்பு தந்தனர். அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கி - அன்னைத் தமிழில் வழிபாடு செய்வதற்கு வழிவகுத்ததைப் போற்றும் வகையில் இத்திட்டத்தால் அர்ச்சகரானவர்கள் கோபுரம் போன்ற வடிவமைப்பின்கீழ் ஒரு குழுவாக நின்று வரவேற்பளித்தனர்.திருப்பத்தூர் மாவட்டப் பொறுப்பு அமைச்சரான பொதுப்பணித்துறை - நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களும், மாவட்டக் கழகச் செயலாளர் தேவராஜி எம்.எல்.ஏ. அவர்களும் மிகச் சிறந்த முறையில் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து வைத்து, பயனாளிகளுக்கான உதவிகளை வழங்கி மகிழ்ந்தேன். சில வாரங்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டிய நிகழ்வு இது. ஓயாத உழைப்பினால் உடல்நிலையில் ஏற்பட்ட சிறிது பாதிப்பு காரணமாக அப்போது ஒத்திவைக்கப்பட்ட நிகழ்ச்சி, இப்போது நடைபெற்றது.பொதுவாக, அரசு நிகழ்ச்சி என்றாலும் அதற்கான பயண வழியில் வரவேற்பு என்றாலும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை முதல்வரிடம் அளித்து, “எனக்கு இதைச் செய்து கொடுங்க” என்றுதான் கேட்பார்கள். ஆனால், திருப்பத்தூர் நிகழ்வில் சந்தித்த பொதுமக்கள் பலரும், “உடம்பு சரியில்லேன்னு சொன்னாங்களே, நல்லாயிட்டீங்களா? உடம்பை நல்லா பாத்துக்குங்க. கொஞ்சம் ஓய்வெடுத்து வேலை பாருங்க” என்றுதான் அக்கறையுடன் தெரிவித்தனர். உடல்நலன் காக்கும் ஆலோசனைகளையும் வழங்கினர்.திருப்பத்தூர் மாவட்ட நிகழ்வுகளை முடித்துக் கொண்டு வேலூர் மாவட்டத்திற்கு வந்தபோது, நத்தம் பகுதியைச் சேர்ந்த இராஜேஸ்வரி பிரதீஷ் என்ற பெண்மணி மிகச் சின்ன அளவிலான ஒரு சீட்டைக் கொடுத்தார். அதில் என்ன கோரிக்கை எழுதப்பட்டிருக்கிறது என்று நான் ஆவலுடன் பிரித்தால், “சாமை உணவு எடுத்துக் கொள்ளுங்கள் ஐயா. காய்ச்சல் வராது” என்று எழுதியிருந்தார். அதைப் படித்தபோதே உடம்புக்குப் புதிய தெம்பு வந்தது போன்ற உணர்வு.வேலூர் மாவட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் – மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் துரைமுருகன் அவர்களும், மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி நந்தகுமார் எம்.எல்.ஏ. அவர்களும் மிகச் சிறப்பான முறையில் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். அந்த நிகழ்வுகளை முடித்துக்கொண்டு ராணிப்பேட்டை மாவட்டம் செல்லும் வழியில், மருத்துவச் சேவையில் புகழ் பெற்று விளங்கும் சி.எம்.சி. மருத்துவமனையின் புதிய கட்டடத்தைப் பார்வையிட்டேன். வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது வருகை தந்திருந்தார். ராணிப்பேட்டை மாவட்டத்திற்கான புதிய சி.எம்.சி. மருத்துவமனைக் கட்டடத்தை இணைய வழியாக ஏற்கனவே தொடங்கி வைத்திருந்த நான், மருத்துவமனை நிர்வாகத்தின் அன்பான அழைப்பினை ஏற்று நேரிலும் பார்வையிட்டேன். அவர்களின் சேவை உணர்வுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்ததைக் கண்டேன்.ஜூன்-30 அன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கச் சென்றபோது வழியெங்கும் வரவேற்பு. பள்ளிக்கூடங்கள் அமைந்துள்ள பகுதிகளில், குழந்தைகள் திரண்டு நின்று உற்சாகமாகக் கையசைத்தனர். அதுபோலவே கல்லூரி மாணவர்களும் அன்பை வெளிப்படுத்தி மலர்களைக் கொடுத்து வரவேற்பு தந்தனர். மாணவர்களைப் பார்த்ததும் எனது முகமலர்ச்சி இன்னும் கூடுதலானது.விழா நிகழ்ச்சிக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள காப்பகப் பள்ளியைப் பற்றி அறிந்து, திடீரென அதனைப் பார்வையிடச் சென்றேன். நீண்ட காலம் சிறார் சீர்திருத்தப் பள்ளியாக இருந்து, தற்போது ஆதரவற்ற மாணவர்களுக்கான காப்பகப் பள்ளியாக அது செயல்பட்டு வருகிறது. அங்கு சென்றபோது, கண்காணிப்பாளர் விடுப்பில் இருப்பதையும், காப்பகப் பொறுப்பாளர் வரவில்லை என்பதையும் தெரிந்துகொண்டேன். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவிட்டு, காப்பகப் பள்ளியின் வகுப்பறைக்குள் சென்றேன்.வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியையும் பாடம் பயின்ற மாணவர்களும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். வகுப்பு நிலவரம், சாப்பாடு சரியாக இருக்கிறதா, என்னென்ன வசதிகள் செய்து தரப்பட்டிருக்கின்றன என்பதை எல்லாம் அவர்களிடம் கேட்டேன். அந்தக் காப்பகப் பள்ளியை ஆய்வு செய்து முடித்தபிறகு, சமூகநலத்துறை அமைச்சர் திருமதி. கீதாஜீவன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள காப்பகப் பள்ளிகள் அனைத்தையும் மேம்படுத்தும் வகையிலான செயல்திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதைத் தெரிவித்தேன்.குறிப்பாக, ராணிப்பேட்டை காப்பகப் பள்ளியைச் சுற்றி நிறைய இடவசதி இருந்தும் மாணவர்களுக்கேற்ற வசதிகள் முழுமையான அளவில் இல்லை என்பதை எனது ஆய்வின் அடிப்படையில் சுட்டிக்காட்டினேன். மறுநாளே, அமைச்சர் அவர்கள் அங்கே நேரில் சென்று பார்வையிட்டு, அந்தக் காப்பகப் பள்ளியையும் தமிழ்நாட்டில் உள்ள மற்ற காப்பகப் பள்ளிகளையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்த்து 342.24 கோடி ரூபாய் மதிப்பிலான 69 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தேன். 68.74 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 61 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன். மொத்தமாக, 1,18,346 பயனாளிகளுக்கு 731 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினேன்.3 மாவட்ட நிகழ்வுகளை முடித்துக்கொண்டு, சென்னை திரும்பிய அன்று மாலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாசிச - மதவெறிச் சக்திகளுக்கு எதிரான பொதுவேட்பாளராகக் களமிறங்கியுள்ள திரு.யஷ்வந்த் சின்ஹா அவர்கள் ஆதரவு திரட்டிட நேரில் வந்திருந்தார். அவருக்கு அறிவாலயத்தில் வரவேற்பளித்து, தோழமைக் கட்சியினருடன் இணைந்து ஆதரவை உறுதிசெய்து, வெற்றிக்கான வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.ஜூலை 1-ஆம் நாள் சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, கோப்புகளைப் பார்த்துவிட்டு, அன்று மாலை திருச்சிக்கு விமானத்தில் சென்று, அங்கிருந்து கரூருக்குச் சாலைவழிப் பயணத்தை மேற்கொண்டேன். 5 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டபோது, கழக முதன்மைச் செயலாளரும் மாண்புமிகு நகராட்சி வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேரு அவர்கள் சிறப்பான வரவேற்பினைத் திருச்சி மாவட்ட எல்லை வரையிலும் ஏற்பாடு செய்திருந்தார். திருச்சியின் 3 மாவட்டக் கழகச் செயலாளர்களும் நிர்வாகிகளும் வரவேற்பளித்தனர். பெட்டைவாய்த்தலையைக் கடக்கும்போது கரூர் மாவட்டம் சார்பிலான பிரம்மாண்ட வரவேற்பினை மாண்புமிகு மின்சாரம் - மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்திருந்தார். உற்சாகமாகத் திரண்டிருந்த கழகத்தினர் - பொதுமக்களின் வரவேற்பினை ஏற்றுக்கொண்டு கரூரில் உள்ள அரசு விருந்தினர் விடுதிக்குச் சென்றடையும்போது இரவு 9 மணிக்கு மேலாகிவிட்டது.கரூரில் உள்ள தொழிலதிபர்கள், சிறு-குறு தொழில்துறைகளைச் சார்ந்தோர் நேரில் வந்து சந்தித்து, கடந்த ஓராண்டுகால ஆட்சியில் தொழில்துறை முன்னேற்றத்திற்காக நமது கழக அரசு செய்து தந்துள்ள வசதிகளுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, மேலும் சில கோரிக்கைகளை வைத்தனர். அதுபோலவே, மறுநாள் (ஜூலை 2) காலையில் விருந்தினர் விடுதிக்கு வருகை தந்த உவழர்களின் பிரதிநிதிகளும் தங்களுக்கான கோரிக்கையைத் தெரிவித்தனர்.விருந்தினர் விடுதியிலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் வழியெங்கும் ஊக்கமும் உற்சகாமும் தரும் வகையில் வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தார் திரு.செந்தில் பாலாஜி. வழியில் கழகத்தின் மூத்த முன்னோடியும், கடந்த ஆண்டு முப்பெரும் விழாவில், இனமானப் பேராசிரியர் பெருந்தகையின் பெயரிலான விருது பெற்ற பெருமைக்கும் பேரன்புக்கும் உரியவருமான சுப. ராஜகோபாலன் அவர்கள் மக்களோடு மக்களாக நின்று வரவேற்பளித்தார். அவரைக் கண்டதும் வாகனத்தை நிறுத்தி, நலன் விசாரித்தேன். தன்னுடைய நலத்தைத் தெரிவித்து, என் நலத்தில் அக்கறை காட்டி, கழக அரசு அனைத்து மக்களுக்குமான அரசாக செயல்படுவதை மகிழ்ச்சியுடன் அவர் பகிர்ந்து கொண்டபோது நெகிழ்ந்தேன்.கரூரில் பயனாளிகளுக்கான நிகழ்வு நடைபெறும் இடத்திற்குச் சென்றபோது சற்று ‘மிரண்டு’தான் போனேன். பொதுவாக, இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும்போது, பயனாளிகள் அமர்ந்துள்ள பகுதிக்கு நடந்து சென்று, முகம் பார்க்கும் வகையில், அவர்களின் அன்பைப் பெறுவது வழக்கம். கரூர் நிகழ்வில் ஒட்டுமொத்தமாகப் பயனாளிகள் மட்டுமே நிறைந்திருந்ததுபோல அவ்வளவு பெரிய எண்ணிக்கை. அவர்கள் அமர்ந்திருந்த பகுதியில் நடந்து வருவதற்கு 20 நிமிடங்கள் தேவைப்பட்டன. ஏறத்தாழ 80 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். காலையில் நேர நெருக்கடியால் தவிர்க்கப்பட்ட ‘வாக்கிங்’கை நிகழ்ச்சி வளாகத்தில் நிறைவேற்றச் செய்துவிட்டார் மாவட்ட அமைச்சர்.கரூர் மாவட்ட நலத்திட்டப் பணிகள், அடிக்கல் நாட்டிய திட்டங்கள், தொடங்கி வைத்த திட்டங்களின் மதிப்பு ஆகியவற்றின் மொத்த மதிப்பு 1,100 கோடி ரூபாய். விருந்தினர் விடுதியில் சந்தித்த தொழிலதிபதிர்கள் - உழவர் பிரதிநிதிகளின் கோரிக்கைகள் சிலவற்றை அறிவிப்புகளாகவும் விழா மேடையிலேயே அறிவித்தேன்.எழுச்சியான அந்த நிகழ்வை முடித்துவிட்டு, புறப்பட்டு வந்தபோது வழியெங்கும் மக்கள் அலை. பெண்கல்வி போற்றும் கழக அரசின் முத்தான திட்டமான, உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கான மாதம் 1000 ரூபாய் திட்டத்திற்குப் பதிவு செய்திருந்த மாணவிகள் வரிசையாகக் காத்திருந்தனர். அவர்களைப் பார்த்ததும் வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கி, அவர்கள் நின்ற தூரம்வரை நடந்து சென்று நலன் விசாரித்தேன். படிப்பால் ஒருவர் அடையக்கூடிய முன்னேற்றத்தையும், பெண்கல்விக்கு இந்த அரசு தரும் முக்கியத்துவத்தையும் உணர்த்தினேன்.  மாணவிகள் ஆர்வமாகப் செல்பி எடுத்துக் கொண்டனர். நாமக்கல் மாவட்ட எல்லையைத் தொட்டதும் கழகத்தின் மேற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ்.மூர்த்தி அன்பான வரவேற்பை வழங்கினார். அங்கிருந்து சிறிது தொலைவு சென்றதும் நாமக்கல் கிழக்கு மாவட்ட எல்லைத் தொடங்கிவிட்டது. மாவட்டக் கழகப் பொறுப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் பெரும்படையைத் திரட்டிய இளவரசன்போல கழகத்தினரையும் பொதுமக்களையும் திரளச் செய்து, ஏறத்தாழ 13 கி.மீ. தூரத்திற்கு எள் விழுந்தால் எண்ணெய்யாகிவிடும் என்கிற அளவிற்கு இடை&#

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.