போதும்பா நா கிளம்பறேன் கை எடுத்து கும்பிடாத குறையாக கிளம்பும் உத்தவ் தாக்ரே - என்ன நடந்தது மகாராஷ்டிரத்தில்?

முதல்வருக்கான அரசு இல்லத்தை உத்தவ் தாக்கரே காலி செய்ததால் மகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்த திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனாவை சேர்ந்த மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டேவால் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவர் சிவசேனாவை சேர்ந்த குறிப்பிட்ட எம்.எல்.ஏக்களை குஜராத் மாநிலத்திற்கு அழைத்து அங்கு உள்ள ஹோட்டலில் தங்க வைத்து கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்.

இந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 34 பேர் சேர்ந்து சட்டமன்ற கட்சி தலைவராக ஏக்நாத் ஷிண்டேவால் நியமித்து நேற்று தீர்மானம் நிறைவேற்றினர்.

இவர் அரசியல் குழப்பம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மாநில முதலமைச்சரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே மாநில மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது நம் எம்.எல்.ஏக்களுக்கு என்ன ஆனார்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள் அல்லது எங்கு கொண்டுசெல்லப்பட்டார் என நான் பேச விரும்பவில்லை! எனது உடல் நலம் மற்றும் அறுவை சிகிச்சை காரணமாக நான் கடந்த சில மாதங்களாக மக்களை சந்திக்கவில்லை என்பது உண்மை,

ஆனால் தற்பொழுது நான் மக்களை சந்திக்க தொடங்கி விட்டேன் இதை பாபாசாகிப் அவர்களின் சிவசேனா இல்லை என சிலர் கூறுகின்றனர் அவர்கள் பாபாசாகிப்பின் எண்ணங்கள் என்ன என்பதை கூற வேண்டும் இந்துத்துவா வாழ்வை கொண்டுள்ள இந்த சிவசேனா தான் தற்போதும் உள்ளது.

நான் எனது ராஜினாமா கடிதத்தை எனது எம்.எல்.ஏக்கள் இடம் கொடுக்க தயாராக உள்ளேன், எனது எம்.எல்.ஏக்கள் இங்கு வந்து எனது ராஜினாமா கடிதத்தை பெற்றுக்கொண்டு கவனமாகச் செல்லவேண்டும். எனது கட்சித் தொண்டர்கள் கூறினால் சிவசேனா கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகும் தயாராக உள்ளேன், எம்.எல்.ஏக்கள் கூறினால் நான் முதல்வர் பதவியிலிருந்து விலகவும் தயார் மக்களின் அன்பு தான் உண்மையான சொத்து கடந்த 2 நாட்களாக ஆண்டுகளாக மக்களின் அன்பைப் பெற்றது எனக்கு மகிழ்ச்சி என கூறியுள்ளார்.


Source - Maalai Malar

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.