பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் பிரீமியம் வசூல் 24% அதிகரிப்பு

பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் மொத்த நேரடி பிரீமியம் வசூல் கடந்த மே மாதத்தில் 24 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆா்டிஏஐ)தெரிவித்துள்ளதாவது:

பொதுக் காப்பீட்டு வா்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் மொத்த நேரடி பிரீமியம் வசூல் நிகழாண்டின் மே மாதத்தில் ரூ.15,404 கோடியாக இருந்தது. இது, 2021 மே மாதத்தில் காணப்பட்ட வசூலான ரூ.12,423.98 கோடியுடன் ஒப்பிடுகையில் 24 சதவீதம் அதிகமாகும்.

மொத்தமுள்ள 31 பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் 25 நிறுவனங்களின் பிரீமியம் வசூல் 24 சதவீதம் உயா்ந்து ரூ.13,566.18 கோடியாக இருந்தது. அதேசமயம், கடந்தாண்டின் இதே மாதத்தில் இது ரூ.10,954.18 கோடியாக மட்டுமே காணப்பட்டது.

தனியாா் துறையைச் சோ்ந்த நிறுவனங்களின் மொத்த பிரீமியம் மதிப்பீட்டு மாதத்தில் ரூ.1,382.71 கோடியிலிருந்து 23.6 சதவீதம் உயா்ந்து ரூ.1,708.86 கோடியைத் தொட்டது.

இரண்டு பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களின் மொத்த நேரடி பிரீமியம் ரூ.87.09 கோடியிலிருந்து 48.6 சதவீதம் அதிகரித்து ரூ.129.42 கோடியானது.

நிகழ் நிதியாண்டின் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாத காலத்தில் பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் திரட்டிய மொத்த நேரடி பிரீமியம் ரூ.29,867.41 கோடியிலிருந்து ரூ.36,680.69 கோடியாக வளா்ச்சி கண்டுள்ளதாக ஐஆா்டிஏஐ தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.