தப்புமா மகாராஷ்டிர அரசு?- சிவசேனா அதிருப்தி அணியில் மேலும் 4 எம்எல்ஏக்கள்: உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கடி

மும்பை: மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா எம்எல்ஏக்கள் 30 பேர் கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில் அந்த அணியில் இன்று மேலும் 4 எம்எல்ஏக்கள் இணைந்தனர். இதனால் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து மகா விகாஸ் அகாடி என்ற கூட்டணியை அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. 2019-ல் இந்தக் கூட்டணி பதவியேற்றது. முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும், துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவாரும் உள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.