போப் ஆண்டவரை சந்தித்த ஒடிசா முதல்வர்

கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வாடிகன் நகரில் வியாழக்கிழமை சந்தித்து பேசினார்.

ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் 10 நாள் பயணமாக துபை, ரோம் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒருபகுதியாக உலக உணவு திட்டத்தின் அழைப்பின் பேரில் ஒடிசாவின் பேரிடர் மேலாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பாக உரையாற்றுவதற்காக இத்தாலி சென்றுள்ளார். 

இதையும் படிக்க |  அமலாக்கத் துறையில் ஆஜராக அவகாசம் கோரிய சோனியா காந்தி

இந்நிலையில் வாடிகன் நகரில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸை வியாழக்கிழமை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது மாநில தலைமை செயலர் விகே பாண்டியன் உடனிருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து சர்வதேச தொழில் முதலீட்டாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் நவீன் பட்நாயக் ஒடிசா மாநிலத்தில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்க உள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.