ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக திரிணமூல் காங். கட்சியினர் போராட்டம்

 

அசாமில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக  திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் சிவசேனை சட்டப்பேரவைக் குழுத் தலைவரும் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே மற்றும் 21 எம்எல்ஏக்கள் கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிராகத் திரும்பியுள்ளதால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

முதலில் அமைச்சருடன் 10 எம்எல்ஏக்கள் காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் எம்எல்ஏக்கள் அனைவரும் அசாம் மாநிலம் கௌகாத்தியில் உள்ள ரேடிசன் புளூ விடுதியில் முகாமிட்டுள்ளனர்.

தற்போது ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக 42 எம்எல்ஏக்கள் உள்ளதாகவும் அதில் 34 பேர் சிவசேனைக் கட்சியினர் என்றும் 8 பேர் சுயட்சை எம்எல்ஏக்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து ஏக்நாத்தின் ஆதரவாளர்கள் அதிகரித்து வருவதால் மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக ரேடிசன் புளூ விடுதி முன் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ரிபுன் போரா தலைமையில்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.